கோவை பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன், அதிமுக சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர்.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’ -கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரி பெண்
மொத்தம் 8,556 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் அதிமுகவே இத்தனை ஆண்டுகள் வென்றிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் கோவையில் திமுக ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை.
கடைசியாக 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தது. இதனால் மீண்டும் இந்த ஊராட்சியைக் கைப்பற்ற அதிமுக முனைப்பு காட்டியது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான வேலுமணி, வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி என்று பெரிய டீம் வேலை பார்த்தது.
திமுக தரப்பில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜனுடன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளரான டாக்டர் மகேந்திரனுக்கும் இந்த ஊராட்சிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கலைவாணியே முன்னிலை வகித்து வந்தார். 6,552 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் கலைவாணி 4,372 வாக்குகளும், சரோஜினி 2,075 வாக்குகளும் பெற்றனர்.
இதன் மூலம் 2,287 வாக்குகள் வித்தியாசத்தில் கலைவாணி பெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FFs0lx
via
