விருதுநகர்: `ரூ.25 லட்சம்; 117 சவரன் நகைகள் பறிமுதல்!’ - 2 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

0

தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி, ஒரே நாளில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்ளிலும், வாகன சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்திலுள்ள 18 சோதனைச் சாவடிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இதில், 17 சோதனைச் சாவடிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் கட்டுப்பாட்டிலும், ஒரு சோதனைச் சாவடி போலீஸாரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.34,17,935 கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணம், நகைகள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள தலைக்குந்தா சோதனைச்சாவடியில் மட்டும் பணம் ஏதும் சிக்கவில்லை. விருதுநகரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கருப்பையா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் - மதுரை சாலையில் சோதனையில் ஈடுபட்டபோது, 2 கார்கள் மதுரை நோக்கி வேகமாகச் சென்றது. 2 கார்களையும் மடக்கினர். முதல் காரில் விருதுநகர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, தன் கணவர் ராஜாவுடன் இருந்தார்.

Also Read: போலி ஆர்.சி புத்தகம் தயாரித்த ஆர்.டி.ஓ அலுவலர்கள்!- சிக்கவைத்த சி.சி.டி.வி கேமரா

``என்னோட மகளும், என்னோட மாமியார் வீட்ல தங்கியிருக்கிறதுனால நகைகளுக்குப் பாதுகாப்பு இருக்காதுன்னு இங்க எடுத்துட்டு வந்துட்டேன்” என போலீஸாரிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நகைகள் அவருடையதுதான் என்பதற்கு ஆதாரம் எதையும் காட்டமுடியவில்லையாம். அத்துடன், அதில் சில நகைகள் புத்தம் புதியதாய் இருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. `மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் நீங்கள் மாவட்டம் தாண்டி வந்ததது ஏன்?’ என்ற கேள்விக்கு, `காரை சர்வீஸுக்கு எடுத்து வந்தேன்’ என மழுப்பலாகப் பதிலைச் சொலியுள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள சுண்டமேட்டூர் அண்ணாநகரில் உள்ள கலைச்செல்விக்குச் சொந்தமான 2 வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கலைச்செல்வி, சண்முக ஆனந்த்

அங்கு, வேறு ஏதும் பணம், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என, 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர். சில ஆவணங்களைத் தவிர வேறெதுவும் சிக்கவில்லை. இதேபோல, நாமக்கல் அருகேயுள்ள நல்லிபாளையத்திலுள்ள மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரான சண்முக ஆனந்தின் வீட்டிலும் சோதனை நடத்தினர். அதில் ரூ.6,46,000 பணம், 30 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து கலைச்செல்வி, சண்முகஆனந்த் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்வியில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் விருதுநகர், தற்போது கணக்கில் வராத பணப் பறிமுதலிலும் முதலிடம் பெற்றுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3gRSFj1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*