இன்று முதல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது அஜித்-61 படத்தின் ஷூட்டிங். 'வலிமை'க்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. நாம் முன்பே சொன்னதுபோல, ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலத்தை செட் போட்டுள்ளனர்.
அஜித்திற்கு படத்தில் டபுள் ஆக்ஷன் ரோல். ஒரு கேரக்டரில் நெகட்டிவ் ஷேட் பண்ணவிருக்கிறார். ஹீஸ்ட் ஸ்டோரி என்பதால்.. ஹைதராபாத்தில் உள்ள அரங்குகளிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படுகிறது. தவிர சூர்யாவின் 'அயன்' படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் ஒரு பாடலுக்கு வருவார் அல்லவா.. அதைப்போல படத்தில் அஜித்திற்கு பல கெட்டப்புகள் உண்டாம். அவரது ஜோடியாக தபு நடிக்கிறார் என்ற தகவலை படக்குழு மறுத்துள்ளனர். ஹீரோயின்கள் பரிசீலனையில் அஜித்துடன் ஏற்கெனவே ஜோடி சேர்ந்த நடிகைகள் சிலரின் பெயர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
டெக்னீஷியன் டீமும் வினோத்தின் அதே டீம் தான். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்டண்ட்டை சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன் இருவர் கவனிக்கின்றனர். 'வலிமை' விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கை கவனிக்கிறார். காஸ்ட்யூம் டிசைனராக அனுவர்த்தன் கமிட் ஆகியுள்ளார். 'பில்லா'வில் இருந்து அஜித்துடன் பல படங்களுக்கு காஸ்ட்யூம் அமைத்து வருபவர் இவர். இப்போதைக்கு தீபாவளி வெளியீடாக படத்தை அறிவித்துள்ளனர்.
from தமிழ் சினிமா https://ift.tt/lsmqt5x
via Umn news Tamil
