டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகளா... அமைச்சர் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இச்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தீவிரமடையும் போராட்டம்

வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமானது எனவும் இதனால் தங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனவும் நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 18-ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

‘’மத்திய அரசு உண்மைக்கு புறம்பான செய்திகளைச் சொல்லி, டில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது அவதூறுகளைத் தூற்றுகிறது. விவசாயிகளைப் பிளவுப்படுத்தவும் முயற்சிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 'விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்டுகள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்' என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அப்பட்டமான பொய்யைச் சொல்லி இருக்கிறார்.

பி.ஆர்.பாண்டியன்

இது உண்மைக்கு புறம்பானது. இதை அவர் திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கு பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் ரயில் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/384QYuK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*