கரூர் காந்தி சிலை அகற்றம்: போராடிய ஜோதிமணி; தரதரவென இழுத்து கைதுசெய்த போலீஸ்!

0

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்ட விவகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜோதிமணியை போலீஸார் சாலையில் தரதரவென இழுத்துப் போய் கைது செய்து, வாகனத்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.

இழுத்து செல்லப்படும் ஜோதிமணி

கரூர் நகரத்தில் உள்ள லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் தேச தந்தை காந்தியின் சிலை வைக்கப்பட்டிருந்தது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட அந்த சிலையை, நேற்று நகராட்சி சார்பில் அகற்றினர்.

Also Read: 70 ஆண்டுகால சிலை அகற்றம் ஏன்; கொதிக்கும் ஜோதிமணி - கரூரைக் கதிகலக்கும் `காந்தி சிலை’ அரசியல்

இதனால், அங்கு திரண்ட காங்கிரஸார், நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். `பழைய காந்தி சிலையை அகற்றிவிட்டு, அங்கு புதிய காந்தி சிலையை வைக்க இருக்கிறோம்' என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு அங்கே வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, `காந்தி சிலையை அகற்றிவிட்டு, அங்கே முன்னாள் முதல்வரின் சிலையை வைக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முயல்கிறார்.

காங்கிரஸார் போராட்டம்

அகற்றப்பட்ட காந்தி சிலையை மறுபடியும் அதே இடத்தில் வைக்காவிட்டால், நிலைமை விபரீதமாக இருக்கும்' என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், விவகாரம் பெரிதானதால், இன்று அதிகாலையில் புதிதாக ஒரு காந்தி சிலையை, லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கொண்டு வந்து வைத்தனர். இந்த நிலையில், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இன்று காலை 9 மணியளவில், ஜோதிமணி தலைமையிலான காங்கிரஸார் மறுபடியும் கூடினர்.

Also Read: 70 ஆண்டுகால சிலை அகற்றம் ஏன்; கொதிக்கும் ஜோதிமணி - கரூரைக் கதிகலக்கும் `காந்தி சிலை’ அரசியல்

போலீஸார் அவர்களைத் தடுக்க முயல, போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். `தரம் இல்லாத வகையில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, அதன்மீது உறுதித் தன்மை இல்லாதவகையில் காந்தி சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஏற்கெனவே இருந்த காந்தி சிலை நல்ல நிலையில் இருந்த நிலையில், அமர்ந்தபடி இருந்த நிலையில் இருந்த அந்த காந்திசிலை அகற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு ஏன் தெரிவிக்கவில்லை? இப்போது அமைக்கப்பட்ட காந்தி சிலை அஸ்சிவாரம் சரியில்லாத தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நாளை முதலமைச்சர் திறக்கக் கூடாது' என்று கூறி, ஜோதிமணி போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

புதிய காந்தி சிலை

அவருடன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி, தி.மு.க நகரச் செயலாளர்கள் அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், தி.மு.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கே வந்த போலீஸார் ஜோதிமணியிடம், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்து ஜோதிமணி போராட்டத்தில் ஈடுபட்டதால், வலுக்கட்டாயமாக ஜோதிமணி உள்ளிட்ட 50 பேரை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், ஜோதிமணி கலைந்து செல்லாமல் போராட்டத்தில் உறுதிக்காட்ட, அவரை 5-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கியபோது, அவர் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸார் கைது

அதனையும் பொருட்படுத்தாமல், கரூர் எம்.பி ஜோதிமணியை தரதரவென்று இழுத்து போய் வாகனத்தில் போலீஸார் ஏற்றினர். அதோடு, அவரோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஈடுப்படனர். இதனால், கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qFk2AW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*