புதுக்கோட்டை: 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொடரும் குற்றச் செயல்கள்

0

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளையைச் சேர்ந்தவர் தீனதயாளன்(20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 17வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி அந்தச் சிறுமியுடன் தனிமையிலிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பது பெரும் சச்சரவை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தெரிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீனதயாளனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தீனதயாளன் சிறுமியைக் கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, தீனதயாளனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியைச் சேர்ந்த 8வயது சிறுமிக்கு, அறந்தாங்கியைச் சேர்ந்த அஜீத்குமார்(23) என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூற, பெற்றோர்கள் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அஜீத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அனைத்து குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனைகளைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v2UekL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*