விஜய் 65 படத்தில் பிக்பாஸ் கவின் என்ன செய்யப்போகிறார்?! #Vijay65

0

விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த #Vijay65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தியா முழுக்க வில்லன் நடிகருக்கானத் தேர்வு நடைபெற்றுவருகிறது. மலையாள நடிகை அபர்ணா தாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே நேற்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்றவரும், டிவி சீரியல் நடிகருமான கவின் கலந்துகொண்டார். இதனால் கவின் இப்படத்தில் என்னவாக நடிக்கப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவியது, படத்தில் கவினுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

கவின்
அபர்ணா தாஸ்

ஆனால், படக்குழுவில் விசாரித்தபோது வேறு தகவல்கள் கிடைத்தன. ''பிக்பாஸ் கவின் இயக்குநர் நெல்சனுக்கு நல்ல நண்பர். நெல்சன் தற்போது இயக்கிமுடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்திலும் கவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். #Vijay65 படத்திலும் அவர் உதவி இயக்குநராகவேப் பணியாற்றயிருக்கிறார். இப்போதைக்கு அவர் படத்தில் நடிப்பதாக எந்தத் தகவலும் இல்லை'' என்றார்கள்.

விஜய் 65 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் - மே - ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. படத்தை 2022 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம்.



from தமிழ் சினிமா https://ift.tt/2PJAAKz
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*