திண்டுக்கல்: `என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்!’ - பிரசாரத்தை ஆரம்பித்த அ.தி.மு.க வேட்பாளர்

0

அ.தி.மு.க கூட்டணியின் தொகுதி உடன்பாடு குறித்து, கட்சிகள் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பழனிசாமியும் என ஆறு பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டார்.

தேன்மொழி

Also Read: `வத்தலக்குண்டைத் தொடர்ந்து நிலக்கோட்டை!' -ஐ.பெரியசாமி அசைன்மென்டால் பதறும் அ.தி.மு.க.

கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தேன்மொழி. மேலும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவு கொண்டவர்.

தேன்மொழி

இந்நிலையில், இன்று காலை தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார் தேன்மொழி. முன்னதாக, வத்தலகுண்டு காளியம்மன் கோவிலுக்குச் சென்ற தேன்மொழி, அங்கே சிறப்பு பூஜையுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, ஆளுயர மாலை அணிவித்தனர்.

Also Read: சமபலத்தில் தி.மு.க, அ.தி.மு.க! - நிலக்கோட்டை (தனி)

கோவிலில் இருந்து பிரசாரத்தை துவங்கிய தேன்மொழி, கோவில் வாசலில் பூ விற்பனை செய்துகொண்டிருந்த பெண் ஒருவரிடம், ’அ.தி.மு.க’விற்கு வாக்களியுங்கள்...’ என்றார். புன்னகையுடன் சரியென சொன்ன அப்பெண், மல்லிகைப் பூவை தேன்மொழியிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட தேன்மொழி, ’நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்.! இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க...’ என்றார். தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி, பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழக அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் இறுதி செய்தல் என பரபரப்பாக இருக்கும் சூழலில், நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி, தனது பிரசாரத்தை துவங்கியுள்ளது, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க’வினரை உற்சாகப்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qmamdT
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*