"கிடைச்ச உதவியால ஜூஸ் கடை போட்டாச்சு... இனி பிறருக்கும் உதவணும்!"- நெகிழும் மாற்றுத்திறனாளி ராஜாராம்

0

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். ஒன்றரை வயதில் தனது இடது காலில் ஏற்பட்ட போலியோ அட்டாக்கால் 38 வயதிலும் தொடர்ந்து இவரை பாதிப்பு பின் தொடர்ந்து வருகிறது. கொரோனா சமயத்தில் வேலை இழந்த இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். ஹோட்டலில் வேலை செய்த இவருக்கு கொரோனா காலகட்டம் சொந்த தொழிலை அமைத்துக் கொள்ள தூண்டியது.

ராஜாராம்

இந்நிலையில் அவரின் நிலை குறித்து விகடனில், "இப்ப சொந்தமா தொழில் பண்றேன்; ஆனா அந்த வலி..!" - மாற்றுத்திறனாளியின் கோரிக்கை - என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அதனை தொடர்ந்து ராஜாராமுக்கு சில உதவிகள் கிடைத்தன. தொடர்ந்து சிவகங்கை மாற்றுத்திறனாளி அலுவலகத்திலும் பேசி உரிய உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டோம். வங்கி மூலமாக மானியத்தில் அவருக்கு 1 லட்சம் லோன் கிடைத்துள்ளது. இதை வைத்து ஒக்கூரில் ஜூஸ் கடை ஒன்றை திறந்துள்ளார். மேலும் கரூர் 'இணைந்த கைகள்' மற்றும் 'ஒன் ஸ்டெப்' அமைப்புகள் பெட்டிக் கடைக்கு தேவையான திண்பண்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து ஊக்குவித்துள்ளனர்.

Also Read: சிவகங்கை: `இப்ப சொந்தமா தொழில் பண்றேன்; ஆனா அந்த வலி..!’ - மாற்றுத்திறனாளியின் கோரிக்கை

இதன் மூலம் தன்னால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்கிறார் ராஜாராம். "எனக்கு பாதிப்பு 65% உள்ளதென மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்திருக்காங்க. இடது கால் மட்டும் சரியா வேலை செய்யாது... தாங்கி, தாங்கிதான் நடப்பேன். கொரோனா காலகட்டத்தில நான் வேலை பார்த்த ஹோட்டல் முடங்கியதால் காய்கறி கடை போட்டு பிழைத்து வந்தேன். விகடன் செய்தியை தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் உதவி கிடைத்தது. நீதிமன்றத்தில் இருக்கும் ஜட்ஜ் ஐயா கூட உதவி செய்திருக்கார். இப்ப லோன் மூலம் ஒக்கூர்ல ’மதுரை ரோடு’ கிட்டக்க ஜூஸ் கடை போட்டிருக்கேன். சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் போடமுடியுது.

ஜூஸ் கடையில் ராஜாராம்

ஓரளவு வியாபரம் இருக்கு. கொஞ்ச நாள் ஆச்சுனா கடை எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சு வியாபாரம் சூடு பிடிக்கும். மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வண்டி தருவதா சொல்லிருக்காங்க. அதுவும் கிடைச்சா கூடுதல் பலனா இருக்கும், சரக்கு வாங்க வண்டில போயிக்கிலாம். எனக்கு உதவி செஞ்ச ஒருத்தரையும் மறக்க மாட்டேன். என்னோட முன்னேற்றத்தை அவங்களுக்கு மனதளவில் பரிசா அளிப்பேன். நான் வாழ்க்கையில் முன்னேறி, பிறருக்கும் உதவி செய்யணும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கு" என்கிறார் நெகிழ்ச்சியாக!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ermXds
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*