திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்று பழனி சட்டமன்றத் தொகுதி. பழனி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், கொடைக்கானல் மலை கிராமங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பழனி தொகுதியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க கேட்டு வருகிறது. தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலில், பழனி தொகுதியை குறிப்பிட்டிருந்தது பா.ஜ.க.
Also Read: கொடைக்கானல்: ``பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி
அ.தி.மு.க-வுடனான கூட்டணியில் பா.ஜ.க உறுதியான இடத்தினை பிடித்திருந்தாலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்த போதும், கடந்த சில நாட்களாகவே, பழனி தொகுதி முழுக்க, தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டிவருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அதன் ஒருபகுதியாக, கொடைக்கானல் பகுதியில், தாமரை சின்னம் கொண்ட சுவர் விளம்பரம் வரையும் பணிகள் நடைபெற்றுவருகிறது. கூடவே, பூத்கமிட்டி அமைத்து களப் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
Also Read: மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?
இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறும் போது, “பழனி தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில், பா.ஜ.க-வின் களப்பணிகள் அதிகம். மக்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு நல்ல பெயர் உள்ளது. கூடவே, பழனி ஒரு ஆன்மீகத் தலம். இவை எல்லாவற்றையும் வைத்து தான், பா.ஜ.க-வுக்கு பழனி தொகுதியை ஒதுக்க வேண்டும் என கேட்டோம். பழனி தொகுதி எங்களுக்கு தான் ஒதுக்கப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதை எல்லாம் வைத்து தான் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்றார் அவர்.
தி.மு.க-வின் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் தான் மீண்டும் பழனி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், தி.மு.க சார்பிலும் தேர்தல் பணிகள் விறுவிறுவென நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3kGKSqm
via
