''சமூக நீதிக்காக குரல் கொடுத்த 'அசுரன்' தேசிய விருது வென்றது ரொம்பவே ஸ்பெஷல்!'' - வெற்றிமாறன்

0

இன்று அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'அசுரன்' தமிழில் சிறந்த படத்திற்கான விருதும், அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும் கிடைத்திருக்கிறது. படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள் சொல்லி பேசினேன்.

'' 'ஆடுகளம்', 'அசுரன்' என இரண்டாவது முறையாக நீங்கள் இயக்கியிருக்கும் படத்துக்கு தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது... இதை எப்படி பார்க்கிறீர்கள்?!''

''இதில் நான் சிறப்பாக சொல்லிக்கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ எதுவும் இல்லை. எல்லாமே தனுஷின் உழைப்பு மட்டுமே. ''குதிரையை தண்ணீரின் அருகில்கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும். தண்ணீரை குடிக்கவைக்க வற்புறுத்த முடியாது'' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல ஒரு இயக்குநரின் படத்தில் ஒரு நடிகர் விருதுவாங்குவது என்பது முழுக்க முழுக்க அவரது திறமையால் மட்டுமே. ஒரு இயக்குநர், நடிகரை வழிநடத்தமுடியுமே தவிர, அதைச் சிறப்பாக அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்வது என்பது நடிகரின் கையில் மட்டுமே உள்ளது. அந்தவகையில் தனுஷ் தன்னுடைய சிறப்பான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி இந்த விருதை வென்றிருக்கிறார்.

வயதில் 50'களின் மத்தியில் இருக்கும் ஒரு மனிதரின் மனநிலையை, உடல்மொழியை மிகவும் இலகுவாக கண்முன் கொண்டுவந்தார் தனுஷ். அந்த உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த சந்தோஷம்.

'' 'அசுரன்' படத்தை இயக்கும்போது தேசிய விருது கிடைக்கும் என நினைத்தீர்களா?''

வெற்றிமாறன், தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ்

''விருதுகள் பற்றி எப்போதும் யோசித்ததில்லை. தயாரிப்பாளருக்கு காசு வருமா, போட்ட பணத்தை எடுப்போமா, சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடிப்போமா, அந்த பட்ஜெட்டுக்குள் படத்தை நேர்த்தியாக எடுப்பது எப்படி என்பதில்தான் முழு கவனமும் இருக்கும்.''

''தமிழில் சிறந்த படமாக 'அசுரன்' விருதுவென்றுள்ளது... உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?''

வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல்

'' 'அசுரன்' மாதிரியான சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு படம் வெகுமக்கள் மத்தியில் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. மீதியெல்லாம் அந்த வெற்றியுடன் வந்து சேர்வதுதான். 'அசுரன்' தேசிய விருது வென்றது ரொம்பவே ஸ்பெஷல்!''



from தமிழ் சினிமா https://ift.tt/3cZyYo3
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*