கோவை: பராமரிப்பதில் சிக்கல்... ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே திருப்பியனுப்பப்பட்ட ஜெயமால்யதா யானை!

0

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த மாதம் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. 26 யானைகள் கலந்து கொண்ட இந்த முகாமில், யானைகளுக்கு சிறப்பு உணவு, ஷவர் குளியல், நடைபயிற்சி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெயமால்யதா யானை

Also Read: மூர்க்கத்தனமாகத் தாக்கும் பாகன்கள்; கதறும் யானை! - கோவை யானைகள் முகாம் அதிர்ச்சி

இதனிடையே, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா என்ற யானையை அதன் பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வினில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், வினில்குமார் மற்றும் சிவபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், ஜெயமால்யதா யானையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, அந்த யானையின் உரிமையாளருக்கான சான்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்தது. அது காலாவதியாகிவிட்டதால், ஜெயமால்யதா யானையை திருப்பியனுப்புமாறு அசாம் வனத்துறை கூறியது.

ஜெயமால்யதா யானை

மேலும், ஜெயமால்யதா யானையை தாக்கியவர்கள் மீது காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வளர்ப்பு யானைகள் மேலாண்மை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை வன உயிரின காப்பாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு வினில்குமார் மற்றும் சிவபிரசாத் ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகன்கள் ஜாமீனில் வெளிவந்தாலும், சஸ்பெண்டில் இருப்பதால், யானையை பராமரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.

ஜெயமால்யதா யானை

இதைத்தொடர்ந்து, ஜெயமால்யதா யானையை, மீண்டும் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலை தேக்கப்பட்டியில் இருந்து யானை ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3e5jmS5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*