மதுரை : பிரமாண்ட கேஸ் சிலிண்டர் வைத்து தேர்தல் பரப்புரை - கவனத்தை ஈர்க்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்

0

மதுரை திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்க்காக வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார்கள் கட்சியினர்.

சி.பி.எம் வேட்பாளர் பொன்னுத்தாய்

வேட்பாளர் அறிமுக நாளில் எளிமையானவர் என்பதை வெளிப்படுத்த ஆட்டோ டிரைவரான தன் கணவர் கருணாநிதியின் ஆட்டோவில் வாக்கு கேட்டு வலம் வந்தார்.

Also Read: கணவரின் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பு - எளிமையால் ஈர்க்கும் திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர்

இந்த நிலையில் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் என சி.பி.எம்-ன் பல்வேறு சார்பு அணியினர் சமூக பிரசனைகளை எடுத்துச் சொல்லி பொன்னுத்தாய்க்கு வாக்கு கேட்டு வருகின்றனர்.

பிரமாண்ட கேஸ் சிலிண்டர்

பகத்சிங் நினைவு தினமான இன்று சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்ட, 12 அடி உயர சிலிண்டருடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், அதை தீர்த்து வைக்க தேர்ந்தெடுக்கப்படவர் என்ன செய்ய வேண்டும் என்பதை வேட்பாளரிடம் மக்கள் நேரடியாக தெரிவிக்கவும், வேறு குறைகளை இருந்தால் அதை வேட்பாளர் பொன்னுத்தாயிடம் தெரிவிக்கவும் அலைபேசி செயலி ஒன்றை இன்று அறிமுகப்படுத்தினர்.

செயலி அறிமுகம்

பலம் பொருந்திய அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து வித்தியாசமான முறையில் சி.பி.எம் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2NKVnN9
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*