மிஸ்டர் மியாவ்

0

தமிழ், தெலுங்கு என எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் அனுஷ்கா, விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம். உடல் எடையைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்திவரும் அனுஷ்கா, நிறைய கதைகளையும் கேட்டுவருகிறார். ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கும் படத்தில், நவீன் பொலிஷெட்டியுடன் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். ஆக, டோலிவுட், கோலிவுட்டில் இருக்கும் ஸ்வீட்டியின் ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

அனு கீர்த்தி வாஸ்

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ எனத் தமிழில் மாளவிகா மோகனன் நடித்த இரண்டு படங்களுமே உச்ச நட்சத்திரங்கள்தான். தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னதோடு மட்டுமல்லாமல் `அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்று ட்வீட் செய்ததன் விளைவு, உடனே தனுஷுக்கு ஜோடியாகிவிட்டார். இப்போது மாளவிகாவின் அடுத்த டார்கெட் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. விரைவில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை கங்கனா ரணாவத், “தமிழ் சினிமாவில் குரூப்பிசமோ கேங்கிசமோ இல்லை. வெளியேயிருந்து உள்ளே வருபவர்களைப் புறம் தள்ளாது, ஆதரவளித்து ஊக்கம் கொடுக்கின்றனர். எனவே, இங்கேயே இனி நிறைய படங்கள் பண்ணலாம் என நினைக்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசியது இந்த வார ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

அனு கீர்த்தி வாஸ்

2018-ம் ஆண்டு, மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்தி வாஸ், சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். ‘பிக் பாஸ்’ புகழ் முகென் ராவ் அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார். இந்தப் படத்தை ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கிவருகிறார். இதைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் அனுகீர்த்தி தான் நாயகி. மாடலிங்கில் கலக்கிய இவர், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து லுக்கில் சேஞ்ச் ஓவர் காட்டவிருக்கிறார். சன் பிக்சர்ஸ், விஜய் சேதுபதி எனப் பெரிய கூட்டணியாக இருப்பதால் அனு செம ஹாப்பி!

உஷ்...

ஃபைனான்ஸ் செய்துகொண்டிருக்கும் பலரிடமும் ‘சி’ கணக்கில் கடன் வாங்கிவிட்டு, கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் அந்தப் பெரிய நடிகரின் மனைவி. கேட்டால், மிரட்டல் தொனி பதில்தான் வருகிறதாம். “இந்தம்மாகிட்ட கடனைக் குடுத்து வசூலிக்கறதுக்கு... எங்காச்சும் ஆஸ்ரமத்துக்குப் போயிடலாம்போல இருக்குப்பா” என்று புலம்புகிறார்கள் ஃபைனான்ஸியர்கள்!



from தமிழ் சினிமா https://ift.tt/3u08t8M
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*