இன்று 'அசுரன்' தேசிய விருது... நாளை 'The Gray Man' ஷூட்டிங் ஆரம்பம்... செம சந்தோஷத்தில் தனுஷ்!

0

இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார் நடிகர் தனுஷ். 'துள்ளவதோ இளமை' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த தனுஷ் 2011-ம் ஆண்டு 'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருதை வென்றார். இப்போது இரண்டாவது முறையாக 2019-ம் ஆண்டு வெளியான 'அசுரன்' படத்துக்காக தேசிய விருதை வென்றிருக்கிறார் தனுஷ்.

தனுஷ் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கிறார். இந்தியாவில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நேரம் அமெரிக்காவில் நள்ளிரவு நேரம். ஆனாலும், தேசிய விருது செய்தி உடனடியாக அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.

அசுரன்

நாளை ஹாலிவுட் படமான 'The Gray Man' படத்துக்கான ஷுட்டிங் லாஸ் ஏஞ்சலீஸில் தொடங்கயிருக்கும் நிலையில், இன்று தேசிய விருது கிடைத்திருப்பதில் தனுஷ் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

'வெக்கை' நாவலைத் தழுவி வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படத்தில் 'சிவசாமி' என்கிற கதாபாத்திரத்தில் இளைஞராகவும், 50 வயது முதியவராகவும் நடித்திருந்தார் தனுஷ். இந்தப்படத்தை இயக்குவதற்காக வெற்றிமாறன் முதன்முதலில் தனுஷிடம் கதை சொன்னபோது ''யார் பையனாக நடிக்கப்போவது'' (சிவசாமியின் மகனாக) என்றுதான் கேட்டாராம். கதையைக் கேட்டவுடனேயே 50 வயது சிவசாமி கதாபாத்திரத்தில் தான்தான் நடிக்க வேண்டும் என அப்போதே முடிவெடுத்திருக்கிறார் தனுஷ்.

வாழ்த்துகள் தனுஷ்!



from தமிழ் சினிமா https://ift.tt/3vLJaZL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*