`ஜெயலலிதா அக்கா.. மோடி தம்பி; அவர்கள் கனவு நிறைவேற வேண்டும்!’ -தேனியில் சி.டி.ரவி பேச்சு

0

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேரிக்க, பா.ஜ.க’வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, போடிக்கு வந்தார். ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்திக்கும் விதமாக, போடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்த சி.டி.ரவி, ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தினரிடம், ஓ.பி.எஸ்’ற்கு வாக்களிக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். உடன், தேனி எம்.பி ரவீந்திரநாத், ஜக்கையன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகள் இருந்தனர்.

ஓ.பி.எஸ் - சி.டி.ரவி

Also Read: ஸ்டார் தொகுதிகள்: பன்னீருக்கு போக்குக் காட்டும் போடி!

நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவி, “நம் கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் வேண்டுமானாலும் தலைவர்கள் ஆகலாம். ஆனால் தி.மு.க., காங்கிரஸில் வாரிசுகள் தான் தலைவராக முடியும்.

பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி, 12 ஸ்மார்ட்சிட்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தி.மு.க., காங்கிரஸ் தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது. தடையை உடைத்து, வீரவிளையாட்டை மீண்டும் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ் - சி.டி.ரவி

தி.மு.க கூட்டணிக் கட்சிகள், முருகன் உள்ளிட்ட இந்துமதக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள். அதை உணர்ந்து செயல்படுங்கள். இந்து மதத்தை பாதுகாக்கும் கூட்டணிதான் தமிழகத்தை ஆள வேண்டும். ஜெயலலிதாவும், மோடியும் அக்கா-தம்பி போல. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும். எனவே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.” என்றார். முன்னதாக, ஓ.பி.எஸ்., சி.டி.ரவிக்கு வெள்ளி வேல் பரிசாக கொடுக்கப்பட்டது.

Also Read: ’அமைதிப்படை’ ஓ.பி.எஸ்! ’தகரம்’ தங்க தமிழ்ச்செல்வன்!’ - போடி பிரசாரத்தில் டி.டி.வி தினகரன்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uyjwGL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*