கும்பகோணம் : கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2 மருத்துவர்கள் உயிரிழப்பு!

0

கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 31ம் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

கொரோனா வைரஸ்

Also Read: `கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் சிறப்பு விடுப்பு!' - விழுப்புரம் எஸ்.பி

பொதுமக்கள் மட்டுமின்றி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள்,செவிலியர்கள்,அரசு அதிகாரிகள், காவல் துறையினர்,ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்

கும்பகோணம் சாந்தி நகரில் தனியார் நீரழிவு சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வந்தவர் மருத்துவர் சித்தார்த்தன்(52). இவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Also Read: திடீரென சீல் வைக்கப்பட்ட மருத்துவர் புகழேந்தியின் கிளினிக்; இதுதான் காரணமா?

இதையடுத்து சித்தார்த்தனுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சித்தார்த்தன் உயிரிழந்தார். இரவது மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், `கும்பகோணத்தில் சிறப்பாக மருத்துவப் பணியாற்றிய சித்தார்த்தன் மறைவு என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, அவரோடு மருத்துப் பணியாற்றும் சக மருத்துவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனவே அவரது குடும்பத்தினருக்கும்,மருத்துவ நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா தொற்றுக்கு பலியான டாக்டர்

அதே போல் கும்பகோணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீம்(75). காது,மூக்கு, தொண்டை டாக்டரான இவர் ஆயிகுளம் எதிரே தனியாக கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாள்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் சிகிச்சை பலனின்றி டாக்டர் அப்துல் அஜீம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தது கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QLmk4P
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*