புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ரங்கசாமி, கடந்த 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு தாமதானது. பா.ஜ.கவுடன் அமைச்சரவை பங்கீட்டு விவகாரத்திலும் இழுபறி நிலவுவதால் அமைச்சரவையும் பதவியேற்கவில்லை.
சிகிச்சை முடிந்து புதுச்சேரி திரும்பிய ரங்கசாமி தற்காலிக சபாநாயகராக தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ லட்சுமிநாராயணனை பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின்படி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் லட்சுமிநாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்களும், மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்காக முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட வீடியோ செய்தியில், ``கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் புதுச்சேரி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியிருக்கிறது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் சிக்கலை தவிர்க்கும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்கப்படும்.
Also Read: புதுச்சேரி: `முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாசிட்டிவ்!’ - தொடர் காய்ச்சலால் சென்னையில் சிகிச்சை
புதுச்சேரியிலுள்ள மொத்தம் 3,50,000 குடும்பத்தினருக்கு இந்த நிவாரண தொகை விரைவில் வழங்கப்படும். அதேபோல் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிவாரண தொகையையும் உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் தாங்களாகவே தங்களை பாதுகாத்துக் கொண்டால்தான் கொரோனா தொற்றில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3hRDeKb
via
