கடலூர்: ‘வெடித்துச் சிதறிய பாய்லர்; தூக்கி வீசப்பட்ட உடல்கள்! சிப்காட் தீ விபத்து!'

0

கடலூர் முதுநகரில் அமைந்திருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையில் 25-க்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருக்கும் 'கிரிம்சன்' என்ற பூச்சி மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வழக்கம்போல் அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

உயிரிழந்த சபிதா

அப்போது காலை 7 மணி அளவில் பூச்சி மருந்துகளுக்கான மூலப்பொருள் கலக்கும் பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல பாய்லரில் இருந்து வெளியேறிய புகை மூட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பாய்லரில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தப்பிக்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

உயிரிழந்த ராஜ்குமார்

தொடர்ந்து உள்ளே சென்று அங்கு மயங்கிக் கிடந்த தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்து குறித்து அறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள் தொழிற்சாலையின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு காயம் ஏற்பட்டதை அறிந்து கதறி அழுதனர்.

விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் அங்கு விரைந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெறுவோருக்கு தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இப்படியான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Also Read: காட்டுமன்னார்கோயில்: பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட உடல்கள்! - பட்டாசு ஆலை விபத்தில் 7 பெண்கள் பலி

இந்த விபத்தில் ராஜ்குமார், சவீதா, கணபதி, விகேஷ்ராஜ் என நான்கு பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்திருக்கின்றனர்” என்றும் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருகிறது தமிழக அரசு.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3htq9a1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*