உங்கள் பகுதியில் அரசின் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதில் சிக்கலா? உதவி எண்கள் இதோ!

0

விவசாயிகள் உற்பத்தி செய்யும், காய்கறிகள் மற்றும் பழங்களை விநியோகிப்பதற்கான அனுமதி பெறுவதிலோ அல்லது சந்தைப்படுத்துவதிலோ ஏதாவது சந்தேகங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்தால் விவசாயிகளுக்காகவும் காய்கறி மற்றும் பழ விற்பனையாளர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு தொடங்கும் முன்பே இப்படி ஓர் கட்டுப்பாட்டு அறை வேண்டும் என்பதை பசுமை விகடன் இதழ் சுட்டிக் காட்டி வந்தது. இந்த விஷயம் அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் பழங்களை வாகனங்கள் மூலம் வினியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விவசாயிகள்

தோட்டக்கலைத் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத்துறை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இ-வணிக நிறுவனங்கள் மூலமாகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி பகுதியில், தினமும் 2,000 வாகனங்களிலும் பிற மாவட்டங்களில் 5,000 வாகனங்களிலும் காய்கறி மற்றும் பழங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

விவசாயிகள், விவசாய குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. காய்கறிகளையும் பழங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெறுவது தொடர்பாகவும் அல்லது விநியோகம் குறித்தும் விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்காக தோட்டக்கலை துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத் துறை சார்பாக பிரத்தியேக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் இயங்கி வரும், வேளாண் விற்பனைத்துறை கட்டுப்பாட்டு அறையினை 044 - 2225 3884 என்ற எண்ணிலும் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டு அறையினை 1800 425 4444 என்ற எண்ணிலும் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறையினை 044 - 2859 4338 என்ற எண்ணையும் விவசாயிகளும் வியாபாரிகளும் தொடர்புகொள்ளலாம். (இந்த எண்கள் சரியாக செயல்படுகின்றனவா? என்பதை அறிய தொடர்பு கொண்டு பார்த்தோம். எதிர் முனையில் இருந்த அலுவலர்கள் கனிவுடன் பேசினார்கள்).

மேலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர்களையும் தோட்டக்கலைத்துறை இணை/ துணை இயக்குநர்களையும் தொடர்புகொள்ளலாம். அவர்களுடைய தொடர்பு எண்களை கீழே உள்ள படத்தில் காணலாம்...

இதுதொடர்பாக வேளாண் விற்பனைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``கடந்த ஆண்டு கொரோனா கால ஊரடங்கின்போதே இப்படியான ஹெல்ப் லைன் எண் கொடுக்கப்பட்டது. இப்போது அதனை விரிவுபடுத்தியுள்ளோம். நாளொன்றுக்குச் சராசரியாக 500 அழைப்புகள் வருகின்றனர். விவசாயிகளிடம் உள்ள விளைபொருள்களை விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம். பொதுமக்களும் இந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர் “ என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QYPNIQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*