சைலஜா டீச்சர்: பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம் இல்லை! - கட்சி தீர்மானத்தால் திடீர் திருப்பம்

0

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை எல்.டி.எஃப் கூட்டணி கைப்பற்றியது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியானதி. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் பதவி ஏற்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த எல்.டி.எஃப் கூட்டணி கூட்டத்தில் வரும் 20-ம் தேதி 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

சி.பி.எம் கட்சிக்கு 12 அமைச்சர்களும், சி.பி.ஐ-க்கு 4 அமைச்சர்களும், ஜனதாதள் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு அமைச்சர் வீதமும் வழங்கப்படும். பாக்கி உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 21 அமைச்சர்களுக்கான துறை குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேற்று நடந்த எல்.டி.எஃப் கூட்டணி கூட்டத்தில் கேக் வெட்டிய பினராயி விஜயன்

பினராயி விஜயனின் இரண்டாவது ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் புதுமுகமாக இருப்பார்கள் எனவும், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என முன்னர் அமைச்சரவை குறித்து தகவல்கள் வெளியானது. ஏனென்றால் கடந்த எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக செல்வாக்குமிக்கவராக இருந்தவர் கே.கே.சைலஜா டீச்சர். ஓகி புயல், மழை வெள்ள பிரளயம், நிப்பா வைரஸ், கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றவர் அவர்.

Also Read: சலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்!

எனவேதான் அவர் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் அமைச்சர் ஆக வாய்ப்பு இல்லை என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. முதல்வர் பினராயி விஜயனைத் தவிர அனைவரும் புதிய நபர்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தீர்மானித்ததைத் தொடர்ந்து கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் அமைச்சர் ஆக வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கே.கே.சைலஜா டீச்சர்

கட்சியின் தீர்மானத்தால் மூத்த மத்தியக்குழு உறுப்பினரும், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த கே.கே.சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பது அவரது ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கெளரி அம்மா, சுசீலா கோபாலன் ஆகியவர்களை தொடர்ந்து கம்யூனிஸ்டின் பெரிய பெண் தலைவராக உருவெடுத்து வந்தவர் கே.கே.சைலஜா டீச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3f1gkOZ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*