கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் ஏற்கெனவே இரு வாரங்களுக்கு அடைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரு வாரத்துக்குத் திறக்கப்படாது என்கிற அறிவிப்பால் மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால் ஒரு சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சும் முயற்சிகளும் நடக்கத் தொடங்கியுள்ளன.
Also Read: முழு ஊரடங்கு, முழு குழப்பம், தெளிவில்லாத அறிக்கை, திண்டாடும் விவசாயிகள்... தேங்கும் விளைபொருள்கள்!
நெல்லை சந்திப்பு சி. என். கிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சாராய நாற்றம் வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியிருக்கிறார்கள்.
வீட்டின் வெளியே போலீஸார் நிற்பதைக் கண்டதும் அந்த வீட்டுக்குள் இருந்த இருவர் அங்கிருந்து தப்பியோடினார்கள் அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் சி.என். கிராமத்தைச் சேர்ந்த உடையார் , ராமையன்பட்டியைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பது தெரியவந்தது.
Also Read: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் கடுமையான ஊரடங்கு... நாளை கடைகள் திறந்திருக்கும்! - முழு விவரங்கள்
வீட்டுக்குள் சோதனையிட்டதில், கள்ளச் சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுப்ட்டிருந்த்து தெரியவந்தது. அதற்காகப் போடப்பட்டிருந்த ஊறல்களில் இருந்து வெளியே வந்த நாற்றம் காரணமாகவே இருவரையும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் போலீஸுக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
கள்ளச் சாராயம் தயாரிக்கத் தேவையான பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன் உடையார், சூரியமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். கடந்த பல நாள்களாக மது குடிக்காமல் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் கள்ளச் சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனர். போலீஸார் தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fhBokm
via
