கொரோனா பாதிப்பு: சென்னையை மிஞ்சும் நிலையில் கோவை!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னைக்கு அடுத்து, கோவை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைய, கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை

சுகாதாரத்துறை அறிவிப்பின்படி சென்னையில் நேற்று 4,985 பேரும், கோவையில் நேற்று 4,277 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட மற்ற பகுதிகளில் தினசரி பாதிக்கப்பட்டவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Also Read: `கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. நேற்று 4,277 பேருக்கு கொரோனா உறுதியாக 2,528 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3,944 பேருக்கு கொரோனா உறுதியாக 2,454 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கொரோனா

கடந்த மூன்று நாள்களில் கோவையில் புதிதாக 11,386 பேருக்கு கொரோனா உறுதியாக 7,359 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸப் குழுக்களிலும், செல்போன் அழைப்புகளிலும் 24 நேரமும் ஆக்ஸிஜன் படுக்கை மற்றும் மின் மயான கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

Also Read: கோவை: கொரோனா தேவி சிலை..! 48 நாள்கள் மகா யாகம்..!

கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ பிரிவு படுக்கைகள் கடந்த சில வாரங்களாகவே முழுமையாக நிறைந்து காணப்படுகின்றன. இதனால் மருத்துவமனை தேடி செல்பவர்களும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் மட்டுமே சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 7-10 பேர் உயிரிழக்கின்றனர்.

கொரோனா இறப்பு

இதனால் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 10 மின் மயானங்கள் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை உடல்கள் எரிக்கப்படுகின்றன.

Also Read: `கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சராசரியாக ஒரு மின் மயானத்தில் நாள் ஒன்றுக்கு 12 உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதுதவிர தினமும் 20 உடல்கள் எரிக்க இடம் இல்லாமல் தேங்குகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினசரி 100-ஐ தாண்டுகிறது. ஆனால், அரசு கொடுக்கும் தகவல்படி கடந்த 3 நாள்களில் கோவையில் 81 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா இறப்பு

``கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அரசு தகவலை வெளியிட வேண்டும். கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

கோவை மக்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2SnUfkK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*