கொரோனா அபாயம் பற்றி பொதுமக்களிடம் மக்களிசைப் பாடகர் மதிச்சியம் பாலா மூலம் பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது மதுரை காவல்துறை. இது, வெளியே சுற்றும் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பெரிய அளவில் பாதித்து வரும் கொரோனா பேரிடரின் இரண்டாம் அலை, மதுரையிலும் தீவிரமாகி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அத்தியாவசிய பணி செய்கிறவர்கள் தவிர மற்றவர்கள் வெளியே வரவேண்டாம் என்று அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சிலர் கேட்பதில்லை.
இந்நிலையில், மதுரையின் முக்கிய சந்திப்புகளில் கவால்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை தெற்குவாசல் போக்குவரத்து சந்திப்பில் காவல்துறையின் இசைக்குழுவினர் பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
`மக்க கலங்குதப்பா...' திரைப்படப் பாடல் மூலம் பிரபலமானவர் மதிச்சியம் பாலா. மக்களிசைப் பாடல்களை பாடி வரும் இவர், மதுரை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இவர் காவல்துறையின் ஏற்பாட்டில், போக்குவரத்து சந்திப்புகளில் தேவையில்லாமல் வாகனங்களில் வருவோரை நிறுத்தி கொரோனா அபாயம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பாடல்களை பாடி எச்சரித்து வருகிறார்.
தேவையில்லாமல் மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க மதுரை மாநகர காவல்துறை எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் மதிச்சியம் பாலாவை பாட வைத்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2S8FGBq
via
