கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தை புரட்டிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுப்பதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க இடம் கிடைக்காத நிலையும் நீடிக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நேற்றும் இன்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன் ஒருபகுதியாக, மதுரை மாவட்டத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து இன்று காலை ஆய்வு செய்தார். உடன், அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் வெறும் 3 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்தார். தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பணி ஆணைக்கான, பதவி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். 17 பேருக்கு முந்தைய அ.தி.மு.க அரசு, கிராம உதவியாளர் பணி வழங்கியது. பயனாளிகள் பட்டப்படிப்பு படித்து இருந்ததால், கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 17 பேருக்கும் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது
Also Read: எழுவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்!'- ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ! #NowAtVikatan
இதற்கிடையில், ஸ்டாலினை சந்திப்பதற்காக, கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள், முதல்வர் காப்பிட்டு திட்ட ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கலைந்து போகச் சொல்ல, அவர்கள் மறுத்துவிடவே, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரி முதியவர் ஒருவர் கையில் டீசல் கேனுடன் வருகை தந்து தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச்சென்றனர். ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலினிடம் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க அனுமதிக்கப்பட்டனர். அதைப் பெற்றுக் கொண்டு பின்பு அங்கிருந்து புறப்பட்ட அவர், தோப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கிவைத்தார்.
ஆய்வுக் கூட்டத்தை வெறும் 3 நிமிடங்கள் மட்டும் நடத்தியது, மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் ஆகியவை மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3u8ni90
via
