அமுல் நிறுவனத்தை சைவ பால் தயாரிக்க சொன்ன பீட்டா; வலுக்கும் எதிர்ப்பு!

0

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வரக் காரணமான பீட்டா அமைப்பு தற்போது, சோயா மூலம் சைவ பால் தயாரிக்க வேண்டும் என்று அமுல் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளதைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள்.

Amul

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீட்டா அமைப்பு விலங்குகள் பாதுகாப்புக்காக இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மாடுகள் துண்புறுத்தப்படுவதாகக் கூறி தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க காரணமானது. மக்களின் எழுச்சியான போராட்டங்களால் தடை நீங்கியது. அப்போது முதல் பீட்டா மீது தமிழக மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்யக் கூடாது என்றும் அதற்கு மாற்றுத் திட்டத்தை நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவு சங்கமான அமுல் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PETA

இதைக் கண்டித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, ``பால் உற்பத்தியில் வெண்மைப் புரட்சி செய்து உலகிலேயே முதலிடம் வகிக்கும் நம் நாட்டில் மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்யாமல் சோயா மூலம் சைவ பால் உற்பத்தி செய்ய வேண்டும் என குஜராத் கூட்டுறவு அமைப்பான அமுல் நிறுவனத்துக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

பீட்டாவின் சர்வாதிகார போக்குக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து, பால் உற்பத்தியாளர்களை இல்லாமல் செய்துவிட துடிக்கும் பீட்டா, இந்திய விவகாரங்களில் தலையிட ஒன்றிய அரசு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்தி தமிழக பால் உற்பத்தியாளர்களைக் காத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும்.

பொன்னுசாமி

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டதுபோல் இந்திய பால்வள உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு பொதுமக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cbzJL5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*