`நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா?’ - மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவைப் பரப்பிய மாமியார்

0

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சிலா மாவட்டத்திலுள்ள நெமிலி குட்டாதண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் மாமியாருடன் அப்பெண்ணுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தற்சமயம், அப்பெண்ணின் கணவர் ஒடிசாவில் தங்கி கூலிக்கு டிராக்டர் ஓட்டி வருகிறார். இதனால், மருமகளும், மாமியாரும் எலியும், பூனையுமாக அடிக்கடி சண்டைப் போட்டிருக்கிறார்கள்.

மாமியார் - மருமகள்

இந்த நிலையில், கடந்த வாரம் மாமியாருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக, அவர் வீட்டுக்குள் இருக்கிற ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். தொற்று பாதித்த மாமியாரிடமிருந்து மருமகள் சமூக விலகலைக் கடைப்பிடித்திருக்கிறார். சாப்பாடு, தண்ணியை தனியாக கொடுத்து வந்ததாலும், பேச துணையில்லாததாலும் வெறுப்பான மாமியாரோ, மருமகள் மீது கோபத்தை கொட்டியிருக்கிறார்.

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கொதித்துப்போன மாமியாரோ, ``நான் இங்க தனிமையில செத்துட்டிருக்கேன். நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா? உனக்கும் கொரோனா வந்தால்தான். என் நிலைமைப் புரியும்’’ என்றபடியே வேகமாக ஓடிவந்து மருமகளை கட்டிப்பிடித்திருக்கிறார். இப்படி அடிக்கடி செய்திருக்கிறார். இதனால், மருமகளுக்கும் தொற்று பரவியது.

விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்

இதனையே காரணம் காட்டி மருமகளை வீட்டிலிருந்தும் துரத்தியிருக்கிறார் அவரின் மாமியார். வேறு வழித் தெரியாமல், தன் சகோதரியின் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் அந்தப் பெண். வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், மாமியாரின் அட்டூழியங்களை குறையாக கொட்டித் தீர்த்திருக்கிறார் அந்த மருமகள். மாமியார், மருமகள் சண்டையாக இருந்தாலும் `ஒரு நியாயம் வேணாமாடா' என்பது போல இருக்கிறது இந்த சம்பவம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RYB5lF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*