தமிழ் சினிமா நட்சத்திரங்களில் உச்சபட்ச சம்பளத்தை தொட்டிருக்கிறார் நடிகர் விஜய். ரஜினி 'தர்பார்' படத்துக்கு 108 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நிலையில் விஜய் தனது அடுத்தப் படத்துக்கு 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நடிகர் விஜய்யின் 66-வது படம் தற்போது இறுதி செய்யப்பட்டிருக்கிறது. முதல்முறையாக தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப்படத்தை வம்சி இயக்க, 'தில்'ராஜு தயாரிக்கிறார்.
'மாஸ்டர்' படத்துக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் பைலிங்குவல் படம் என்பதால் தமிழுக்கு 80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிக்கு 40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநரான வம்சி 'தோழா' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வம்சியின் லேட்டஸ்ட் படமான 'மஹரிஷி' பெரும் வெற்றி பெற்ற படம். மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே நடித்த இப்படத்துக்கு கடந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு வம்சி இயக்கும் படம் 66வது படம். வம்சிக்கு இது 6-வது படம்.
வாழ்த்துகள் விஜய் & வம்சி.
from தமிழ் சினிமா https://ift.tt/3AWJab4
via
