"அந்த 13 லட்ச ரூபாய் என்னுடையது அல்ல!" - ரெய்டு குறித்து ரகசியம் உடைத்த எஸ்.பி வேலுமணி

0

சட்டசபை கூட்டத் தொடர், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போன்ற பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று கோவை வருகை தந்தார். ரெய்டு நடவடிக்கையை அரசியல் காழ்புணர்ச்சி என்று கூறுவதால், வேலுமணி வருகையை கொண்டாட அ.தி.மு.க-வினர் முடிவெடுத்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

Also Read: ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

கோவை முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு படையெடுத்தனர். ஏற்கெனவே, அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அவிநாசி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் முடங்கி மக்கள் தவித்தனர்.

கொரோனா மூன்றாவது அலையில் கோவைதான் அதிகம் பாதிக்கும் என அதிகாரிகள் எச்சரித்தும் பயனில்லை. கோவை விமான நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இடைவெளியே இல்லாமல் மக்கள் நெருங்கி நகர்ந்து கொண்டனர். ஜமாப் இசை, அ.தி.மு.க கொடிகளுடன் வேலுமணிக்கு தடபுடல் வரவேற்பளித்தனர்.

அ.தி.மு.க-வினர்

கோவை வந்த வேலுமணிக்கு சால்வை போர்த்தி, மலர் கொத்துக்கள் கொடுத்து ஓப்பன் வாகனத்தில் ஏற்றிவிட்டனர். தொண்டர்களை பார்த்து வேலுமணி கையசைக்க, அவர்கள் வழக்கம் போல, “தானை தலைவர் எஸ்.பி.வி வாழ்க..” என்று கோஷம் போட்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி, “தி.மு.க அரசால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்குப்போட்டு, என் சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தமில்லாத இடங்களில் காவல்துறையை ஏவி ரெய்டு நடத்தினர். அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்,

வேலுமணி

முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், கோவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் அதற்குள் போக விரும்பவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்.

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் 5 ஆண்டுகளில் கோவைக்கு பெற்று தந்துள்ளேன். அதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியிலும் எங்களை வெற்றி பெற வைத்து மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக பத்திரிகை செய்தியில் பார்த்தேன்.

வேலுமணி ரெய்டு

என் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. அது தவறான தகவல். அதேபோல, என் வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை. இப்படி தவறான தகவலை வெளியிடுவது வருத்தமளிக்கிறது.

நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். 30 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை செல்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதியரசர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அம்மா மறைந்தபிறகு, ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கிய காரணம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்புணர்ச்சிக்காக பழிவாங்க போடப்பட்ட வழக்கு.

வேலுமணி

நான் உள்ளாட்சித்துறையில் இருந்தபோது 148 விருதுகள் பெற்று யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளோம். அதிகளவு கிராம சாலைகளை போட்டுள்ளோம். கோவை மக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iL6RNl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*