திமுக மீனவரணி நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! -பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்?

0

ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவரணி செயலாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றிய சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள்

ராமேஸ்வரத்தை சேர்ந்த வில்லாயுதம், திமுக மாவட்ட மீனவரணி செயலாளராக உள்ளார். மீன் கம்பெனி, ஹோட்டல் என பல தொழில்களை செய்து வருகிறார்.

அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை கடல் உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் இரண்டு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் வில்லாயுதம்.

வில்லாயுதம்

இந்நிலையில் இராமேஸ்வரத்திலுள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமணிநேரம் சோதனை நடத்தினார்கள்.

வீடு மட்டுமில்லாமல் அவர் நடத்தும் தங்கும் விடுதி, மீன் கம்பெனியிலும் சோதனை நடத்தினார்கள். மாலை 7 மணி வரை நடந்த சோதனையில், வருவாய் தொடர்பான பல்வேறு ஆவணங்களையும், வரி செலுத்தாமல் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

தற்போது உடல் நலமில்லாமல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாயுதம் பல வருடங்களாக சட்டவிரோதமாக கடல் அட்டை கடத்தும் தொழிலை செய்து வருவதாகவும், இவருக்கு கீழ் மாவட்டத்தில் பலபேர் செயல்படுவதாகவும், இதற்காக பல வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுக மீனவரணி செயலாளராகவும் அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மதுரையிலிருந்து சென்ற மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VItauv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*