ரஜினியின் 'அண்ணாத்த' அப்டேட் : லக்னோவில் கடைசிகட்ட ஷூட்டிங்!

0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் கடைசி 15 நாள் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கிறது. படம் நவம்பர் 4 தியேட்டர்களில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 'அண்ணாத்த' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இங்கே!

* படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டதால், ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் சென்னையில் பரபரக்கிறது. ரஜினி, மீனா உள்பட பலரும் ஷூட் செய்யப்பட்ட போர்ஷன்கள் வரை டப்பிங் பேசி முடித்துவிட்டார்கள். குஷ்பு இப்போது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். சூரி படப்பிடிப்பில் பிசியாகிவிட்டதால் இன்னும் அவர் டப்பிங் பேசவில்லையாம்.

* 'பேட்ட'யில் முழுக்க முழுக்க லைவ் லொக்கேஷனில் நடித்து முடித்த ரஜினி, கொரோனா சூழலால் இந்த படத்தில் முழுக்கவே செட்டுக்குள் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஹைதராபாத்தில் முக்கால் வாசி படத்தின் ஷூட் நடந்து முடிந்தாலும், கடைசி ஷெட்யூலை கொல்கத்தாவில் எடுக்க நினைத்தனர். அங்கே கொரோனா பயம் அதிகம் இருப்பதால், இப்போது லக்னோ செல்கிறது 'அண்ணாத்த' படக்குழு.

இயக்குநர் சிவா, மீனா டப்பிங்கின்போது!

* லக்னோ ஷூட்டில் ரஜினி அல்லாத காட்சிகள் ஷூட் செய்யப்படுகிறது. இரண்டு பாடல்களின் மான்டேஜ் ஷூட் தவிர, சில சீன்கள் அங்கே படமாக்கப்பட இருக்கிறதாம். இமான் ஆறு பாடல்கள் இசையமைத்து கொடுத்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டியில் இருக்கும் என்கிறார்கள். 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணான கண்ணே...' என அப்பா மகள் எமோஷனல் மெலடி கொடுத்தது போல, இதில் அண்ணன் - தங்கை பாசம் மிளர வைக்கும் ஒரு அழகான பாடலும் இருக்கிறது என்கிறார்கள். அதன் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது.

* இன்னும் சில தினங்களில் லக்னோ புறப்படும் டீம், இம்மாத இறுதியில் தான் சென்னை திரும்புகிறது. ரஜினியின் 'அண்ணாமலை', 'முத்து', 'படையப்பா' வரிசையில் 'அண்ணாத்த' படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/3A8cmvg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*