கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தம்மம்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தக் குழந்தை திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்தது. இதுகுறித்து மணிகண்டன் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
Also Read: டெல்லி சிறுமி கொலை வழக்கு: `சிறார் வதைக்கான ஆதாரங்கள் இல்லை!' - போலீஸின் அதிர்ச்சி அறிக்கை
இதுதொடர்பாக சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். தம்மம்பதி கிராமத்துக்கு, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். மணிகண்டன் மற்றும் சரோஜினி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவது தெரியவந்தது. சம்பவ தினத்தன்று மணிகண்டன் வேலைக்குச் செல்ல சரோஜினி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதனால், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்தனர்.
குழந்தையின் பிறப்புறுப்பில் வீக்கம் இருப்பதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸார் கேட்டபோது, `குழந்தைக்கு ஒரு மருந்து கொடுத்தேன். அதனால்தான் இப்படியானது’ என்று முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து விசாரித்ததில், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக சரோஜினி வாக்குமூலம் அளித்தார். ``கணவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்கு பொம்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்தோம். எங்கள் உறவுக்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால், அவளை கொலை செய்ய பொம்மன் கூறினார்.
அதனால்தான், கணவர் வேலைக்குச் சென்றவுடன் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து சரோஜினி மற்றும் பொம்மன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AKKE8j
via
