`இயற்கை வேளாண் பொருள்களைக் கொண்டு உணவுத் திட்டம்!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புது முயற்சி

0

திருப்பதியிலுள்ள தேவஸ்தான தலைமை அலுவலக மைதானத்தில், தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி நேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட அவர் தேவஸ்தானத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களையும் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட ஜவஹர் ரெட்டி

Also Read: திருப்பதி பெருமாளுக்குத் தாடையில் பச்சைக்கற்பூரம் வைப்பது ஏன்? #Video

இதையடுத்து, விழாவில் பேசிய செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, ``ஏழுமலையானுக்குத் தற்போது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தியே நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. நைவேத்தியத்தில் நாட்டு மாடுகளின் நெய்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. தினசரி பயன்பாட்டிற்கான நெய்யைத் தயாரிக்க திருமலையில் கோசாலை அமைத்து பராமரிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வரும் கிருஷ்ண ஜெயந்தி முதல் `நவநீத சேவைத் திட்டம்’ தொடங்கப்படும். இதன்மூலம் நாட்டு மாடுகளின் நெய் பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்படும். அதேபோல், `சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரிலும் நான்கு இடங்களில் கேன்டீன் தொடங்கப்படவுள்ளது. இயற்கை வேளாண் பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து லாப நோக்கமின்றி மக்களுக்கு விற்பனை செய்யப்படும்’’ என்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

Also Read: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

அதேபோல், திருமலையிலுள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், ``திருமலையில் தற்போது பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடகை அறை, தரிசன டிக்கெட் பெறுவது ஆகியவற்றை தேவஸ்தானம் எளிதாக்கியுள்ளது. நிபந்தனைகளைப் பின்பற்றி பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sjXhEp
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*