`மதுரை ஆதீனமாக பதவி ஏற்று விட்டேன்; ஆன்லைனில் ஆசி வழங்குவேன்!' - அதிர வைக்கும் நித்யானந்தா

0

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்தாலும், ஆதீன மடத்தை சுற்றும் மர்மங்களாலும், தொடர்ந்து நித்யானந்தா விடும் அறிவிப்பாலும் ஆதீன பக்தர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

திருஞானசம்பந்தர் தோற்றுவித்த 1500 ஆண்டு பாரம்பரியமுள்ள மதுரை ஆதீன மடத்தில் 292-வது ஆதீனமாக 1980-ல் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் மடாதிபதியாக விளங்கிய அருணகிரிநாதர், உடல் நலக்குறைவால் கடந்த 13-ம் தேதி காலமானார்.

மதுரை ஆதீனம்

சைவமும் தமிழும் இரண்டு கண்கள் என ஆன்மீகப்பணி செய்த மதுரை ஆதீனம், அரசியல் பணியும் செய்தார். ஆரம்ப காலங்களில் தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளில் அழுத்தமாக குரல் கொடுத்தார். இலங்கை அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைக் கண்டித்து ஈழ ஆதரவு போராட்டங்களில் கலந்துகொண்டார். இந்தியை எதிர்த்தார்.

அனைத்து சாதி, மதத்தினருடன் இணக்கமாக இருந்தார். பிற மத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். திரவிட இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்களால் கொண்டாடப்பட்டார்.

அரசியல்வாதிகள், கலைத்துறையினருடன் நெருக்கமாக இருந்தார். இந்தளவு பரபரப்பாக எந்த மடாதிபதியும் இருந்ததில்லை. அதேபோல் அவரைப்போல் சர்ச்சைகளையும் சந்தித்ததில்லை.

"சைவத்தையும் தமிழையும் வளர்க்க மன்னர்களும், செல்வந்தர்களும் மதுரை ஆதீனத்துக்கு கொடுத்த ஏராளமான சொத்துக்கள், வாடகை, குத்தகை என்ற பெயரில் பல இடங்களில் யார் யாரோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமுதாய ரீதியாக அவருக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டு பலர் பலனடைந்துள்ளனர்.

Also Read: மதுரை ஆதீனம்: செய்தியாளர் முதல் மடாதிபதி வரை - ஆன்மிகத்தில் புரட்சி செய்த அருணகிரிநாதர்!

அனைத்து கட்சியினருக்கும் பொதுவானவராக இருந்த ஆதீனம் அருணகிரிநாதர், 91-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின்பு எம்.நடராஜனோடு நெருக்கமானார். கஞ்சா வழக்கில் நடராஜனுக்கு தெரிந்த செரீனா கைது செய்யப்பட்டபோது அந்த பிரச்னையில் ஆதீனம் பெயரும் சர்ச்சைக்குள்ளானது.

நித்யானந்தா

"இந்நிலையில்தான் 2004-ல் சேலத்தை சேர்ந்த பரணிதரன் என்ற சிறுவனை இளைய ஆதீனமாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்பின் அச்சிறுவன் எந்த காரணமும் சொல்லாமல் மடத்தை விட்டு அனுப்பப்பட்டான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதை தொடர்ந்துதான் 2012-ல் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அறிவிக்க, பல்வேறு அமைப்புகள் மதுரை ஆதீனத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் நித்யானந்தா சீடர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் இளைய ஆதீன அறிவிப்பை திரும்ப பெற்றார் அருணகிரிநாதர்.

இந்த நிலையில், தான்தான் இளைய ஆதீனம் என்று நித்யானந்தாவும், அதை ரத்து செய்து ஆதீனமும் தாக்கல் செய்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மதுரை ஆதீனம்

ஆதீன மடத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மதுரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள், பல மாவட்டங்களிலும் உள்ள சொத்துக்கள் பலபேருக்கு குத்தகைக்கு மிக குறைந்த தொகைக்கு கொடுக்கப்பட்டு அதிலும் பல பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் ஆதீனம் சீரியஸ் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் தெரிந்ததும் மதுரைக்கு விரைந்து வந்த தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் மடத்திலுள்ள அருணகிரிநாதரின் அறை, ஆவணங்கள், முக்கிய பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சீல் வைக்க உத்தரவிட்டார்கள். iஇந்த நிலையில் தான் சிகிச்சை பலனின்றி கடந்த 13-ம் தேதி ஆதீனம் அருணகிரிநாதர் மரணமடைந்தார்.

சமீபகாலமாக ஆதீனம் சம்பந்தமாக சத்தமில்லாமல் இருந்த நித்யானந்தா ஆதீனம் மறைவு செய்தி பரவியவுடன் உருக்கமாக பேசி தன் சீடர்கள் துக்கம் அனுஷ்டிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். அவர் இங்கு வர வாய்ப்பில்லை என்பதால் ஆதீன நிர்வாகிகள் நிம்மதியாக இருக்கிறார்கள். வருகின்ற 23-ம் தேதி இளைய ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் நித்யானந்தா சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ‘’மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக நான் பதவி ஏற்றுவிட்டேன். இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க இருக்கிறேன். எனது பெயரை 293 –வது ஜெகத்குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் என மாற்றிக்கொண்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா

புதிய ஆதீனம் 23-ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில் நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு மதுரை ஆதீன மட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘’பல மோசடி வழக்குகளில் நம் நாட்டு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவை நாங்கள் பொருட்படுத்தவில்லை, அவரால் நம் நாட்டுக்கே வர முடியாது’’ என்கிறார்கள் மதுரை ஆதீன மடத்தை சேர்ந்தவர்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo


from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CXjL2R
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*