தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வருகிற 16-ம் தேதி மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் தொடங்க உள்ளார். தொடர்ந்து நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அவர் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையின் போது முருகன், தனது பெற்றோரிடம் சென்று ஆசி வாங்க உள்ளார்.
Also Read: அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !
மக்களும், அமைச்சரும் இடைவெளி இல்லாமல் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த யாத்திரை. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் எல்லாரும் அந்தந்த பகுதிகளில் யாத்திரை மேற்கொள்கின்றனர். கொரோனா தளர்வுக்கு பிறகு, முருகன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செல்வார்.
தி.மு.க ஆட்சி 100 நாள்களை கடந்துள்ளது. எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் 6 மாத காலம் அவகாசம் தேவை. இந்த காலகட்டத்தில், அவர்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இப்போதுதான் தொடங்கியுள்ளனர். டி.ஜி.பி, தலைமை செயலாளர் என்று பல நல்ல அதிகாரிகளை கொண்டு வந்துள்ளனர். இப்போது அமைச்சர் சுப்பிரமணியம், மத்திய அரசு, கூடுதலாகவே தடுப்பூசிகளை கொடுப்பதாக கூறியுள்ளார்.
டிஃபென்ஸ் காரிடாரை கொண்டு வந்ததால் ரூ.2,000 கோடி வருவாய் வந்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மக்கள் அதிகம் பயனடைவார்கள். நாங்கள் இங்கு எதிர்கட்சிதானே தவிர, எதிரி கட்சி இல்லை.
பா.ஜ.க எப்போதுமே தேர்தலுக்கு தயாராக உள்ளது. தி.மு.க-வை எதிர்த்து தினசரி போராடும் ஒரே கட்சி பா.ஜ.க தான். பாலியல் வழக்கு தொடர்பான பெண் வீட்டுக்கு சென்று அந்தப் போட்டோவை போட்டதற்காகதான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளனர். தி.மு.க.வினர் ஐ.பி.எல் மேட்ச் நினைப்பிலேயே நாடாளுமன்றத்துக்கு சென்று, யார் எதை பேசினாலும் ஒரு போர்டை எடுத்து காட்டுகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் 2-வது அலையில் முன்களப்பணியாளர்கள் இறந்து கொண்டிருந்தபோது, அந்த எம்.பி கிரிக்கெட் அணி உரிமையாளரின் தம்பி என்ற அடிப்படையில் அவர் மைதானத்துக்கு சென்றார்” என்று கூறினார்.
Also Read: அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xLtg1i
via
