என்.எல்.சி: `லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!’ - லாரிகளுக்குத் தீ வைத்து எரித்ததால் பதற்றம்!

0

கடலூர் மாவட்டம், நெய்வேலி மேலகுப்பத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் கோவிந்தன். என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி திலகவதியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது என்.எல்.சியில் இருந்து ஜெயங்கொண்டத்தில் இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சாம்பலை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று குப்புசாமி-திலகவதி தம்பதியினர் மீது மோதியது.

தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி

அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கினார்கள். அதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த அவர் மனைவி திலகவதி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து கேள்விப்பட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் அங்கு சாம்பல் ஏற்றுவதற்காக நின்றிருந்த 5 லாரிகளுக்கு தீ வைத்து எரித்தனர். அத்துடன் வரிசையாக நின்றிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகளையும், அவற்றின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதேபோல தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த லாரிகளை அணைத்தனர்.

Also Read: நெய்வேலி என்.எல்.சி விபத்து: 11 ஆக அதிகரித்த உயிரிழப்பு! - அச்சத்தில் தொழிலாளர்கள்

விபத்து

அதேசமயம் உயிரிழந்த கோவிந்தனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் முயற்சித்தனர். ஆனால் கோவிந்தனின் உடலை எடுக்க அனுமதிக்காத அவரது உறவினர்களும், ஊர் மக்களும் என்.எல்.சி நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yDCAWn
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*