வேண்டும் வரம் தரும் விருட்ச கல்யாணம்... திருமண வரம் தரும் தாமிரபரணி நதிக்கரை முருகன்! #Video

0

திருச்செந்தூர்... முருக பக்தர்களின் மனம் கவர்ந்த ஊர். திருச்செந்தூரின் மூலவரான செந்தில் ஆண்டவருக்கு அருகே சிவலிங்க மூர்த்தம் ஒன்று அமைந்திருக்கும் திருத்தலம் அது. அதே சிறப்போடு திகழும் திருத்தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ளது. திருச்செந்தூரில் கடற்கரை என்றால் இங்கே நதிக்கரை. வாருங்கள் நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமியை தரிசிப்போலம்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின்கரையில் அமைந்துள்ளது இந்த முருகனின் ஆலயம். சிறிய கோயில்தான் இது எனினும் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. வெளிப் பிராகாரத்தில் கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களை தரிசிக்க முடிகிறது. உள் பிராகாரத்தில் பைரவர் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூரில் மூலவர் தவநிலையிலும் சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. இங்கும் அதேபோல் மூலவரின் இடப்புறத்தில், சிவபரம்பொருள் லிங்கத் திருமேனியுடன், பார்வதி அம்பிகையுடன் காட்சி அளிக்கிறார்.

இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என்று இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள். கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள். சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் - ஊஞ்சல் உற்சவம் என கோலாகலமாக நடைபெறுகிறது சஷ்டித் திருவிழா.

திருச்செந்தூர் முருகன் போன்ற உருவ ஒற்றுமையுடன் நதிக்கரை மூலவர் அருள்வதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால், திருச்செந்தூரில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். ஆகவே, கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூருக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தக் கோயிலில் விரதம் இருந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

நதிக்கரை முருகன்

திருக்கார்த்திகை நாளில் சுவாமி திருவீதியுலா, கார்த்திகை மாதம் சோமவார விரதம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய வைபவங் களும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. இந்தக் கோயிலின் விசேஷங்களில் ஒன்று விருட்ச கல்யாணம்.

அது என்ன விருட்ச கல்யாணம்? இத்தலத்தின் சிறப்புப் பிரார்த்தனைகள் வேறு எவை என்பது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sieka0
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*