அதிகளவில் லஞ்சம் புழங்கும் இடங்கள் என்று சொன்னாலே... பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்கள்தான் மக்களின் நினைவுக்கு வரும். பொதுமக்களோடு அதிகம் தொடர்பில்லாத தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவதென்பது, `இங்கேயுமா லஞ்சம் புழங்கும்!' என மக்கள் மத்தியில் வியப்பான கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
திருவாரூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.1,20,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தியணைப்புத்துறை அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
திருவாரூர் நேதாஜி சாலையில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவுக்கு செய்யப்பட்டுள்ளதா என தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் அவை செயல்பட முடியும் என்பது விதிமுறை.
Also Read: லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு
தீபாவளி சமயத்தில் பட்டாசுக் கடைகள் தொடங்கக்கூடியவர்கள், தீயணைப்புத்துறை அலுவலகத்தை தான் முதன்மையாக சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்க திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையினருக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து, திருவாரூர் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவலர்கள் அடங்கிய டீம், சோனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. இதுகுறித்து தீயணைப்பு உதவி அலுவலர் முருகேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Bdyq90
via
