வடிவேலுவுக்கு ஒமைக்ரான் பரிசோதனை! உடனிருப்பவர்கள் சொல்வதென்ன?

0

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து வடிவேலுடன் உடன் இருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். `` நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான இடத்தேர்வுக்காக லண்டன் போயிருந்தார். அவருடன் இயக்குநர் சுராஜ், லைகா தமிழக நிர்வாகி தமிழ்குமரன் என மூவர் போயிருந்தார்கள். இப்போது வடிவேலு அங்கிருந்து திரும்பி வரும் போது வழக்கமாக லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை நடந்தது. அதில் கொரோனா பாஸிட்டிவ் வரவே இப்போது ராமசந்திராவில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

வடிவேலு

உடல் நலம் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கொரோனோ ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா என்று மேற்கொண்டு பரிசோதனை முடிவில் தெரியவரும் என்றனர். உடன் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் வீட்டிலிருந்து அவருக்கு துணையாக யாரும் இல்லை. ஜனவரியில் படப்பிடிப்பு நடைபெற ரெடியாக இருந்த யூனிட் சற்றே அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். வைகைபுயல் இதிலிருந்து மீண்டு வர வாழ்த்துவோம்.



from தமிழ் சினிமா https://ift.tt/3z2YByP
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*