மண்டபம் ரயில் நிலையம் எதிரிலிருக்கும் மீனவர் குடியிருப்பில் 58 வயதான காளியம்மாள் வசித்து வந்தார். கணவரை இழந்த இவர் மருத்துவமனையில் தூய்மைப்பணியாளராக பணியாற்றிவந்தார்.
காளியம்மாளுடன் அவரின் 33 வயது மகள் மணிமேகலையும் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமலே இருந்தது.
அதனால், அக்கம் பக்கத்தினர், காளியம்மாளின் மற்றொரு மகள் சண்முகப்பிரியாவுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, சண்முகப்பிரியா உடனடியாக சென்று வீட்டைத் திறந்து பார்த்திருக்கிறார்.
அங்குத் தாயும், தங்கையும் எரிந்து சாம்பலாகி, எலும்புக்கூடாகக் கிடந்திருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ந்து போனவர், கதறி அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக மண்டபம் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, ராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின் பேரில் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா? இந்த சம்பவம் எப்போது நடந்தது? என்பது பற்றி மண்டபம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
Also Read: சாக்லேட் திருடிய புகார்; மனநலம் குன்றிய சிறுவனைப் பிரம்பால் அடித்த ஊர்க்காரர்கள்-ராமநாதபுரம் சர்ச்சை
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3GiYjq0
via
