கோவை மாநகர் பகுதியில் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளிலும், கானா பாடல்கள் பாடிக்கொண்டு, கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், கோவை சூலூர் பகுதியில், ‘ஸ்வீட் ராஸ்கல்’, ‘எவரெஸ்ட் பாய்ஸ்’ என பல்வேறு குழுக்களாக பிரிந்து இளைஞர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்துவது, கேங் வார் என்ற பெயரில் மோதிக் கொள்வது என சூளுரை அலற வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக, ஏற்கெனவே சூலூர் காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சூலூர் கேங்கைச் சேர்ந்த சிறார் ஒருவர், `திட்டம்போட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டரு. நீ கை வெச்சா.. தாண்டா மாட்ட சூலூர் பார்டர' என்று அண்மையில் கையில் கத்தியுடன் கானா பாடல் பாடி, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் போலீஸார் கவனத்துக்கு சென்றதை அடுத்து, போலீஸார் அந்த சிறார் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் மீது ஏற்கெனவே வழக்கு இருந்ததால், அவருக்கு சிறப்பு கவனிப்பு அளிக்க முடிவு செய்து, அவரைக் கைது செய்தனர். அதையடுத்து, அவரை நூதன முறையில் தண்டிக்க திட்டமிட்ட சூலூர் போலீஸார், அவர் ஸ்டைலிலேயே கானா பாடல் பாட வைத்து அதை விடியோவாக பதிவு செய்தனர். கையில் கத்தியை வைத்துக்கொண்டு கானா பாடிய அந்த சிறுவனை, `தப்பு மேல தப்பு... நான் பண்ணிட்டேன்டா பெரிய தப்பு' என பாட வைத்தனர்.
Also Read: கோவை: லிவிங் டுகெதர் உறவில் தகராறு?! - காதலன்மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய காதலி
from மாவட்ட செய்திகள் https://ift.tt/31xeeCc
via
