ரஜினி நெக்ஸ்ட்; ரேஸில் வரிசை கட்டும் இயக்குநர்கள் யார் யார்? அடுத்த பட அறிவிப்பு எப்போது?

0

ரஜினியின் அடுத்த படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்குகிறார்... ''இல்லை இல்லை..'' சன் பிக்சர்ஸ் தயாரிக்க, 'பீஸ்ட்' நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் தகவல்கள் சுற்றுகிறன. ஆனால், உண்மையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தேன்.

ரஜினியின் 'அண்ணாத்த' படம் தொடங்குவதற்கு முன்பே, 'தீரன் அதிகாரம் ஒன்று' டைமில் ஹெச்.வினோத்திடம் கதை கேட்டு, அதை ஓகே செய்து வைத்திருந்தார். அந்த சமயத்தில்தான் சிவா ரஜினியிடம் ஃபேமிலி ப்ளஸ் எமோஷனலான 'அண்ணாத்த' கதையைச் சொன்னார். இதற்கு முன் 'காலா', 'கபாலி', 'பேட்ட' 'தர்பார்' என கொஞ்சம் வேற டிராக்கில் போய்விட்டோமோ என நினைத்தவர், சிவாவின் ஃபேமிலி டிராமாவில் இம்ப்ரஸ் ஆனார். சிவாவின் படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத்தின் படத்திற்குள் வரலாமென எண்ணும் போதுதான் வினோத் 'நேர் கொண்ட பார்வை', 'வலிமை' என வேற பஸ் பிடித்து போய்விட்டார்.

ரஜினி

இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' ரஜினியை கவர்ந்தது. உடனே பாண்டிராஜை அழைத்து பேசினார். அவரும் ரஜினிக்காகவே கதை ஒன்றை சொல்லி அசத்தினார். பின்னர், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தேசிங்கு பெரியசாமியிடம் கதை ரெடி பண்ணச் சொன்னார். அவர் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆனார் ரஜினி. எல்லாம் கை கூடி வரும் நேரத்தில் ரஜினியின் ஹெல்த் காரணமாக, அந்த கதையை ஹோல்டில் வைத்திருக்கிறார் ரஜினி.

ரஜினியிடம் அடிக்கடி தொடர்ப்பில் இருப்பவர்கள் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், வெங்கட்பிரபு, பால்கி ஆகியோர் உள்ளனர். இளையராஜாவின் நண்பரும் இந்தி பட இயக்குநருமான பால்கியும் ரஜினியிடன் ஒன்லைன் ஒன்றை சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். 'பேட்ட' கொடுத்த கார்த்திக் சுப்புராஜிடமும் ரஜினிக்கான கதை ஒன்று ரெடியாக இருக்கிறது. இந்நிலையில் தான் நெல்சனும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இது போக, சில இளம் இயக்குநர்களிடமும் ரஜினி கதைகள் கேட்டு வருகிறார். ஆக, இதுவரை யாரிடமும் ரஜினி கமிட் ஆகவில்லை. எல்லாமே பேச்சு பேச்சாகத்தான் இருக்கிறது. ஜனவரிக்கு பிறகு அடுத்த படத்தின் அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்கிறார்கள். அதில் இந்த ரேஸில் உள்ள இயக்குநர்கள் தவிர, வேறு ஒருவர் இருந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் சொல்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/3Hd7GI2
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*