நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

0

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவபடுத்துவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதையொட்டி இன்று (ஜனவரி11,2022) சிலம்பரசன் TR க்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவப்படுத்தியுள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம். இந்த டாக்டர் பட்டம் சிம்பு சினிமா துறையில் தனிச்சிறப்போடு விளங்குபவர் என்பதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர், நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். எம்.ஜி ஆர் , சிவாஜிகணேசன் கமல்ஹாசன், விஜய் மற்றும் விக்ரம் வரிசையில் தற்போது சிலம்பரசன் TR-ம் இணைத்துள்ளார்.வெந்துதணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிதுள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.



from தமிழ் சினிமா https://ift.tt/3Gngs6E
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*