டி.எஸ்.பாலையா: சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெருந்தொகை கொடுத்த வில்லன் நடிகர்! | The Legend

0

சிறுவயதில் தன் சொந்த ஊரான சுண்டன்கோட்டையிலிருந்து மானாமதுரைக்கு ஓடிவந்த பாலையாவிற்கு சர்க்கஸில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், அவை பலிக்காமல் போகவே ஒரு பெண்மணி நடத்திவந்த உணவகத்தில் வேலைபார்க்கத்தொடங்கினார். டி.எஸ்.பாலையாவிற்கு மலையாளம் நன்றாக தெரியும். அதனால் தான் ஒரு மலையாளி என்று பொய் சொல்லி அங்கு வேலையை தொடர்ந்தார்.

நாள்கள் செல்ல செல்ல சர்க்கஸ் மீதிருந்த அவரது ஆர்வம் நாடகத்திற்கு இடம் மாறியது. அதே ஊரில் கசாப்பு கடைக்காரர் ஒருவர் புதிதாக நாடகக்குழு ஒன்றைத் தொடங்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் உதவியாளராக சேர்ந்து எடுபிடி வேலைகள் பார்த்துவந்தார். ஒருகட்டத்தில் தன்னை அந்தக் கசாப்பு கடைக்காரர் ஏமாற்றுகிறார் என்பதை உணரும் பாலையா தன் சொந்த ஊருக்கே திரும்பிவிட நினைக்கிறார். எனவே தான் முன்பு வேலைசெய்த உணவகத்திற்குச் சென்று அப்பெண்மணியிடம் உண்மையைக் கூறி விடைபெறுகிறார்.

அவர் ஊருக்கும் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகே அந்தக் கசாப்பு கடைக்காரரைக் காண்கிறார் பாலைய்யா. இதனால் அந்த வழியாகச் செல்லாமல் ஆற்றில் குதித்துவிடுகிறார் அவர். ஆனால், அந்த ஆற்றில் எதிர்பாராதவிதமாக வெள்ளம் வந்துவிடுகிறது. தன் குலதெய்வமான சோனைய்யாவை வேண்டிக்கொள்ளும் அவர் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்து ஊர் திரும்பி ஜெகநாதன் நாடகக் குழுவில் சேர்கிறார். இவ்வாறே தன் பதினைந்தாவது வயதில் முதல் நாடகக் குழுவில் இணைகிறார் பாலைய்யா.

வில்லனாக, நகைச்சுவையாளராக, குணச்சித்திர பாத்திரமாக தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரான பாலைய்யாவை பற்றி முழுமையாக அறிய கீழுள்ள வீடியோவை காணுங்கள்.


from தமிழ் சினிமா https://ift.tt/3pMaG8w
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*