"நாங்கள் யாருக்கும் போட்டியில்லை!"- `வலிமை vs வீரமே வாகை சூடும்' பொங்கல் ரிலீஸ் குறித்து விஷால்

0

இரண்டு வருட தாமதத்தைக் கடந்து பொங்கலுக்கு 'வலிமை' வெளிவருவதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், திடீரென 'ஒமைக்ரான்' என்ற உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் 'வலிமை' வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், இப்போதைக்கு இதை வெளியிடலாமா வேண்டாமா என்ற யோசனை 'வலிமை' தயாரிப்புத் தரப்புக்கும் வந்துவிட்டது.

இறுதியில் இனிமேலும் தாமதிக்கக்கூடாது என ஜனவரி 13-ம் தேதியை நிர்ணயித்து துணிந்து இறங்குகிறார்கள். தயாரிப்பாளர் போனி கபூரும் 'வலிமை' தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகும் என்று இன்று உறுதியளித்து ட்வீட் போட்டுவிட்டார். ரசிகர்களுக்கு கொரோனாவால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது, அதிகமான கட்டணம் வசூலிக்கத் கூடாது என அஜித் தயாரிப்பாளர் தரப்பில் சொல்ல, அவர்களும் சரி எனச் சொல்லியிருக்கிறார்கள். கட்டணம் என்பது இவர்களின் எவர் கைக்கும் கட்டுப்படாத காரணத்தால் 'வலிமை'க்கு என்ன மாதிரியான கட்டண விகிதம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாத உண்மையாகவே இருக்கிறது.

வலிமை
இது இப்படியிருக்க, பொங்கலுக்குத் தமிழில் 'வலிமை' மட்டுமே வெளிவருவதால், தன்னுடைய 'வீரமே வாகை சூடும்' படத்தை ஜனவரி 14 அன்று வெளியிட துணிந்துவிட்டார் விஷால். இதற்காக எடிட்டிங் இரவு பகலாகச் செய்யப்பட்டு இன்று அல்லது நாளை சென்சாருக்குப் போகிறது படம். பெரும் பொருட்செலவில் 'வலிமை' எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு மாற்றாக வேறு ஆப்ஷனே இல்லாததால், இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை விஷாலுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Also Read: "விஜய் டிவி பக்கம் இனிமே போக வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன்... ஏன்னா?!"- ஆங்கர் பாவனா

விஷாலிடம் கேட்டால், "நாங்கள் 'வலிமை'க்குப் போட்டியில்லை. இரண்டு படத்தையும் மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அவ்ளோதான்!" என்கிறார்.

வீரமே வாகை சூடும்

ஆனாலும் அதிகப்படியான தியேட்டர்கள் 'வலிமை' படத்தின் ரிலீஸிக்காகத்தான் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு மிகவும் குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டு இருந்தாலும் லாபத்தை பார்க்க முடியுமென நம்புகிறார் விஷால்.

புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கும்வரை ஜனவரி 26-ம் தேதிதான் ரிலீஸ் என்ற முடிவில் இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது 'வலிமை' மட்டும்தான் வெளிவருகிறது என்பதாலும், வேறு படங்கள் எதுவும் இல்லை என்பதாலும் மட்டுமே 'வீரமே வாகை சூடும்' வெளியாகிறது.



from தமிழ் சினிமா https://ift.tt/3zmyzH7
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*