மதுரை : அழகர்கோயிலில் 10 வருடங்களுக்குப்பின் நடந்த தெப்பத்திருவிழா.

0

மதுரை அருகே புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான அழகர்கோயிலில் பத்து வருடங்களுக்குப் பிறகு முழுமையாக நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடந்தது.

கள்ளழகர் சுந்தராஜப்பெருமாள்

மதுரை அருகே 'கள்ளழகர்' எனப் போற்றப்படும் சுந்தராஜப்பெருமாள் அருள்பாலிக்கும் புண்ணியத்தலமான அழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமாத தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகக் கோயிலுக்கு சொந்தமான பொய்கைக்கரைப்பட்டி யில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், தெப்பத்தின் கரையை மட்டும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்குக் கள்ளழகர் அருள்பாலித்து வந்தார்.

தெப்பத்திருவிழா

இந்நிலையில் கடந்த ஆண்டு தெப்பத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அழகர் மலையில் பெய்யும் மழை நீர் நேரடியாகத் தெப்பத்திற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் 10 வருடங்களுக்குப் பிறகு தெப்பம் தண்ணீரால் நிரம்பியது. இன்று தெப்பதிருவிழாவிற்காகக் கோயிலிருந்து ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பட்டு தெப்பத்திற்குப் பல்லக்கில் வந்தடைந்தார்.

தெப்பத்திருவிழா

வழியெங்கும் பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டனர்.

தெப்ப நீரில் கள்ளழகர் அன்னம்போல் வடிவமைக்கப்பட்ட 24 அடி நீளமுள்ள தெப்பப் பல்லக்கில் எழுந்தருளி உலா வந்தனர்.

நேற்று பகல் முழுவதும் அங்கேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு மாலை 6 மணிக்கு மேல் கோயிலுக்கு கள்ளழகர் எழுந்தருளினார்.

தெப்பத்திருவிழா

இந்த அற்புத நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/qFW30MJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*