திருத்துறைப்பூண்டி: நகர்மன்ற தலைவர், துணை தலைவர் பதவியை கைபற்றும் முனைப்பில் திமுக தம்பதி?!

0

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்துறைப்பூண்டி நகர்மன்றத்தின் துணை தலைவர் பதவியை, இப்பகுதியைச் சேர்ந்த பிரபல திமுக பிரமுகரும், தலைவர் பதவியை, இவருடைய மனைவியும் கைப்பற்றப்பற்ற இருப்பதாக இப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே திமுக பிரமுகர், 5-வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, அதிமுக-வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ் பாண்டியன் இப்பகுதியில் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்று முறை நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நகர்மன்ற துணை தலைவராகவும் பதவி வகித்தவர். இந்த முறை ஒன் மேன் ஆர்மியாக, போட்டியின்று ஜெயிக்க வேண்டும் என்பது இவரின் எண்ணமாம். 5-வார்டில் இவர் வேட்பு முனுத் தாக்கல் செய்திருந்தார். இதே வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி முருகதாஸ் மற்றும் சுயேச்சையாக 6 நபர்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நான்கு சுயேச்சைகள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். அது தவிர இரண்டு சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தேர்தல் அலுவலர் நிராகரித்தார்.

திமுக வேட்பாளர் ஆர்.எஸ்,பாண்டியனை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் முருகதாஸ் மட்டும் களத்தில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இவரின் வேட்பு மனுவில் பிழை இருப்பதாகவும், இவரை முன் மொழிந்த நபர், விதிமுறைக்கு புறம்பாக வேறொரு வேட்பாளரையும் மொழிந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அதிமுக-வினர் கோபமடைந்து, பிப்ரவரி 6-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை கண்டித்து திமுக-வினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவானது. காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

ஆர்.எஸ்.பாண்டியன்

இதனால், பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நகர்மன்ற துணை தலைவராக தேர்த்தெடுகப்படுவது உறுதி என்கிறார்கள் இப்பகுதி திமுக-வினர். அப்படியென்றால் நகர்மன்ற தலைவர் யார்? திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் பதவி, பொதுப் பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.பாண்டியனின் மனைவி கவிதா தான் சேர்மன் என்கிறார்கள் திமுக-வினர். கவிதா 3-வார்டில் போட்டியிடுகிறார். இவரை கவுன்சிலராக வெற்றிப்பெற வைப்பதற்காக பாண்டியன் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். இந்த வார்டில் ஆர்.எஸ்.பாண்டியனின் குடும்பத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பதாலும், இங்கு கவிதா வெற்றிப்பெற்றால், இவர் தான் சேர்மன் என பரவலாக பேசப்படுவதாலும், கவிதா கண்டிப்பாக வெற்றிப் பெற்றுவிடுவார் திமுக-வின தெரிவிக்கிறார்கள்.

Also Read: சூடு பிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டி!

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் அதிக இடங்களை திமுக கைப்பற்றி, அதேசமயம், ஆர்,எஸ்.பாண்டியனின் மனைவி கவிதா தனது வார்டில் வெற்றிப் பெற்றுவிட்டால், சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/mG0xrNc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*