கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தை ஸ்வீப் அடித்த அ.தி.மு.க-வுக்கு பதிலடி கொடுக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தனர்.
கடந்த காலங்களை போலவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக நிர்வாகிகளிடையே உட்கட்சி பூசல் விவகாரம் வெடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக-விலும் மல்லுக்கட்டு தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகராசி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க ஆட்சியில் இருந்தே எஸ்.பி. வேலுமணியின் நிழலும், நமது நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் மனைவி சர்மிளா பெயர்தான் அடிபட்டு வருகிறது. ஆட்சி மாறிய பிறகு சந்திரசேகர் தரப்பில் சற்றே பின் வாங்கினாலும்,
வேலுமணி அழுத்தம் காரணமாக கோவை மாநகராட்சி 38-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஷர்மிளா. அதனால், சர்மிளா தான் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவுட் ஆஃப் சிலபஸாக மேயர் ரேஸில் புதிய புயலாய் அடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார் கிருபாலினி கார்த்திகேயன். கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மனைவி தான் கிருபாலினி. மாநகராட்சி 7-வது வார்டில் போட்டியிடுகிறார். ரியல் எஸ்டேட் அதிபரான செந்தில் கார்த்திகேயன்,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ வெற்றி பெற பொருளாதாரத்தில் பக்க பலமாக இருந்திருக்கிறார். அ.தி.மு.க தலைமையும் சர்மிளாவை விட கிருபாலினியை அதிகம் ப்ரோமோட் செய்து வருகிறதாம்.
செந்தில் ஆதரவாளர்கள், ‘கிருபாலினி தான் கோவை மாநகராட்சி முதல் பெண் மேயர் வேட்பாளர்.’ என்று வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக சந்திரசேகர் தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். “இத்தனை காலம் தம்பிக்குதான் மேயர் என்று செல்லும் இடமெல்லாம் கூறி, இப்போது இன்னொருவரை வளர்த்துவிடுவதா?” என்று கொந்தளிக்கின்றனர்.
மறுபக்கம் சந்திரசேகர் ஆதரவாளர்கள் சர்மிளாவை நூதன முறையில் பிரசாரம் செய்து ப்ரமோட் செய்வது, #Sharmilachandrasekarforcbe என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சந்திரசேகரின் அபரிமிதமான வளர்ச்சியால் அவருக்கு செக் வைக்க வேலுமணி இப்படி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், ``கோவையை கைப்பற்றுவது வேலுமணியின் கௌரவ பிரச்னை. அதற்கு தி.மு.க-வுக்கு இணையாக செலவு செய்தாக வேண்டும். அதனால்தான் கிருபாலினிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த விஷயம் சந்திரசேகருக்கும் தெரியாமல் இல்லை. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று வேலுமணிக்கு தெரியும். கோவை மாநகராட்சியை தி.மு.க எளிதில் கைப்பற்றி விடக்கூடாது என்பது தான் எங்களின் லட்சியம்.” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Kj381Sw
via
