இரண்டு மாணவிகள்... தமிழ்நாடு டு ஆந்திரா... கோவை போலீஸில் சிக்கிய `மாயாவி’ மணிமாறன்!

0

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த மணிமாறன் மீது மோசடி, பாலியல் என்று ஏராளமான புகார்கள் உள்ளன. ஏற்கெனவே செய்த காதல் திருமணம் விவாகரத்து ஆக, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்தார்.

மணிமாறன்

பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நடுவே ஒரு சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி செய்தப் புகாரில் சிக்கினார். அங்கு பணியாற்றி வந்த ஓர் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெடிக்கவே, கொரோனா காலகட்டத்தில் அவர் கோவை சரவணம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். கடந்தாண்டு எதிர் வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்றார். பெற்றோர் புகாரளிக்க மணிமாறன் மீது போச்சோ வழக்கு பதியப்பட்டது.

மணிமாறன்

மேஜிக், கணிதம், வார்தை விளையாட்டுகளை வைத்து அக்கம் பக்கத்தினரை கவரும் மணிமாறனை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பொதுப் போக்குவரத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கிறார்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார் மணிமாறன். கடந்த டிசம்பர் மாதம் அந்த வீட்டு உரிமையாளரின் 18 வயது கல்லூரி மாணவியையும் அழைத்து சென்று மாயமாகிவிட்டார். சுசீந்திரம் போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மணிமாறன்

மணிமாறனை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து, நோட்டீஸ் அடித்தும், ஊடகங்களில் விளம்பரம் செய்து தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடிவந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வைத்து மணிமாறன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பதியில் இரண்டு மாணவிகளையும் டீ விற்பனை செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து கன்னியாகுமரி மாணவி காவல்துறைக்கு அழைத்து தகவல் சொல்லியிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிறகு செல்போன் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து,

கைது

தனிப்படை போலீஸார் திருப்பதி விரைந்து, மணிமாறனை கைது செய்துள்ளனர். மாணவிகளை பத்திரமாக மீட்ட போலீஸார், மணிமாறனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Vrpgwa0
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*