சசிகலா: ஜெயலலிதா வழிப்பட்ட கோயிலில் சிறப்பு பூஜை... நிர்வாகிகள் சந்திப்புக்கு தடைபோட்ட தினகரன்!

0

தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார் சசிகலா. தஞ்சாவூரில் சசிகலா இருக்கும் போது அமமுக நிர்வாகிகள் அவரை சந்திப்பது வழக்கம். தற்போது சசிகலாவை யாரும் சென்று சந்திக்க கூடாது என அமமுகவினருக்கு டி.டி.வி.தினகரன் மறைமுக உத்தர விட்டுள்ளாராம். அதனால் யாருமே சசிகலாவை சந்திக்கவில்லை எனவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகு,கேது பெயர்ச்சியில் பக்தர்களோடு பக்தராக சசிகலா

அதிமுகவை தன் கைக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஓபிஎஸ் அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்தாலும் சசிகலா அவரை நம்பத் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா வெளிப்படையாகவே சசிகலாவை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனாலும் சசிகலா எண்ணம் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தென்மாவட்டத்தின் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் சசிகலா.

இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி தஞ்சாவூர் வந்தவர் அருளானந்த நகர் அருகே உள்ள பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கிருந்தபடி பல்வேறு முக்கிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சசிகலாவும் 2000-ம் ஆண்டில் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு சென்று நிகும்பலா யாக பூஜை நடத்தி வழிபட்டனர்.

சசிகலா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிரசித்தி பெற்ற பிரத்தியங்கிராதேவி கோயிலுக்கு சென்றவர், தற்போது மீண்டும் சென்று வழிப்பட்டுள்ளார். அதே போல் ராகு கேது பெயர்ச்சிக்காக ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளதும் கவனத்தை பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில் சசிகலா கோயில் கோயிலாக சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருவதும் குறிப்பிடதக்கது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது குறித்து மேலும் விசாரித்த போது, ``சசிகலா ஆன்மீகம், ஜோதிடம் இரண்டிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். சசிகலாவின் ஜாதகப்படி அவர் சரிவை சந்திக்க கூடிய நிலை தொடரும். அத்துடன் ராகு, கேது பெயர்ச்சி சசிகலாவுக்கு நல்ல பலன்களை தராது. மேலும் சிக்கல் வராமல் அதிலிருந்து தற்காத்து கொள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வழிப்பட வேண்டும் என சசிகலாவுக்கு நெருக்கமான ஜோதிடர்கள் தரப்பு தெரிவித்துள்ளதாம்.

சசிகலா

அதன்படி கோயில்களுக்கு சென்று வருகிறார். கும்கோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, நவகிரக ஸ்தலமான சூரியனார் கோயில், சுக்கிரன் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிப்பட்டார். அப்போது நினைத்த காரியம் நடக்கவும், வளர்ச்சிக்கான தடை நீங்கவும் வேண்டி கொண்டாராம். இதனை தொடர்ந்து திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சிக்காக நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2000-ம் ஆண்டில் சசிகலாவுடன் வந்து அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம் நடத்தி வழிப்பட்டார். எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் தங்கு தடை இல்லாமல் நிறைவேறவும், இழந்த சாம்ராஜ்யத்தை மீட்கும் வல்லமை அருளும் சிறப்புமிக்க கோயிலான பிரத்தியங்கிரா தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தியிருக்கிறார்.

திட்டை கோயிலில் சசிகலா

தொடர்ந்து குரு ஸதலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றவர் விநாகயர் சன்னிதிக்கு முன் செதரு தேங்காய் உடைத்த பின்னர் குரு சன்னிதிக்கு சென்று வழிப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

கடந்த தீபாவளி சமயத்தில் தஞ்சாவூர் வந்து ஒரு வாரம் வரை தங்கியிருந்த சசிகலாவை அமமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டமான சந்தித்தனர். அப்போது கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ``என் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல இருக்கிறேன். நீங்க எதிர்பார்த்தது நடக்கும் நம்பிக்கையோடு இருங்க” என்று சொன்னார். ஆனால் சொன்னபடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வில்லை. தற்போது தஞ்சாவூரில் தங்கியிருக்கும் அவர் நிர்வாகிகளை சந்திப்பதாக திட்டம் இருந்தது.

சாமி தரிசனம் செய்த சசிகலா

ஆனால் சில மாதங்களாகவே சசிகலா தினகரனுக்கு இடையே மனகசப்பு ஏற்பட்டு நீண்டு கொண்டிருக்கிறது. தன் கணவர் ம. நடராசன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சசிகலா மட்டும் தனியாக சென்று அஞ்சலி செலித்தினார். ஓ.ராஜாவும் சசிகலாவுடன் இருந்தது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தனியாக சென்ற தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.

இவையெல்லாம் இருவருக்குமான கருத்து வேறுபாடு தொடர்வதை வெளிப்படையாக காட்டுகிறது. இந்நிலையில் சசிகலாவை அமமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்க கூடாது என தினகரன் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தஞ்சாவூர் வந்து ஐந்து தினங்கள் தாண்டிய நிலையிலும் இதுவரை யாரும் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. போக போக சசிகலா தன்னுடைய அடுத்த நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகிறது. தினகரன் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட சசிகலா முடிவெடுத்திருப்பதாகவும் அப்பதான் தன்னால் அதிமுகவிற்குள் செல்ல முடியும்” என கருதுவதாகவும் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/fxIXeRD
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*